சிந்தையின் போர் (The Battle Of The Min வில்லியம் மரியன் பிரன்ஹாம் (கடைசிகால செய்தியாளர் சகோதரன் வில்லியம் மரியன் பிரன்ஹாம் அவர்களால் பிரசங்கிக்கப்பட்ட செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கொள்களைக் கொண்டு இப்புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது. தாறுமாறான சிந்தை உடலுறவின் பேரிலும், அசுத்தத்தின் பேரிலும் தேவ பக்தியற்றதின் பேரிலும் சிந்தைகள் இருக்கின்றது பிரசங்கிகளும் கூட அவ்விதம் இருக்கின்றனர். உலகம் மாசுப்பட்டிருப்பதில் ஆச்சரியமில்லை. அவர்கள் மனம் முழுவதும் உடலுறவின் பேரிலும் அசுத்தம் மற்றும் தேவ பயமற்ற காரியங்களின் பேரிலேயே உள்ளது. இது பிரசங்கிமார்களிடம் கூட உள்ளது. ஆமென். அது கேவலமான ஒன்றாகும். 39,கிறிஸ்துவின் முத்திரை,லாஸ் ஏஞ்சலில்,கலிபோர்னியா 55-0312 மக்களின் சிந்தையில் மிக அதிகமான காரியங்கள் உள்ளன ஆனால், இது என்ன, முன் என்றுமில்லாத சிறந்த மருத்துவர்களையும், என்றுமில்லாத சிறந்த மருத்துவமனைகளையும், என்றும் இதுவரை கையாளப்பட்டிராத சிறந்த மருந்துகளையும் கொண்டுள்ள நாட்களில் வாழ்ந்து வருகிறோம். இருப்பினும், இதற்கு முன்னர் உலகம் அறிந்திராத அதிக நோய்கள் நம்மிடையே இருக்கின்றன. காரணம், இதற்கு முன் உலகம் அறிந்திராத பாவம் மற்றும் அவிசுவாசத்தை கொண்டுள்ளோம். "அது சரியா? அது சரியா?" என்று அங்கலாயித்து மனிதனின் சிந்தையை கிழித்தெறியக்கூடிய அதிகப்படியான காரியங்களைக் கொண்டுள்ளோம். அந்த பரிதாபத்திற்குரிய மக்களுக்கு என்ன செய்வதென்றும் கூட தெரியவதில்லை. பாவமும் வன்முறையும் உள்ளே வந்ததற்கு இதுவே காரணமாக உள்ளது. 20, இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் கெண்டக்கி, 55-0806 மனிதனின் வாஞ்சை தொடர்ந்து தீமையாகவே, அசுத்தமாகவே உள்ளது விவாக வாழ்க்கையானது தேவனால் உண்டானது (of God) விவாக வாழ்க்கையானது கர்த்தருடையது என வேதம் உரைக்கிறது. விவாக மஞ்சம் அசுசிப்படாமல் இருக்கிறது. ஆனால் விபச்சாரமும் நெறிகளும் புறம்பாக இருப்பதும் தான் தாறுமாறகும். அமெரிக்க மக்களின் முழு சிந்தையையும் பாருங்கள். மேலும் இவ்வுலக மக்கள் படிப்படியாக தாறுமாறானவர்களாக நெறியற்றவர்களாகவே மாறி வருகின்றனர். வானொலி மற்றும் தொலைக்காட்சி இவைகளும் கூட எல்லா பாவமும் ஒன்று சேர்ந்த ஒரு பெரிய திரட்சியாகவே உள்ளது. ஏனெனில், மனிதனின் இதயமும் அவைகளையே நாடுகிறது. (மனித இருதயத்தின் ஒவ்வொரு எண்ணமும் ஜலப்பிரளய அழிவிற்கு முன்னர் இருந்தது போலவே இருக்கிறது. மனிதனுடைய ஒவ்வொரு ஒவ்வொரு வாஞ்சையும் தொடர்ந்து தீமையாகவே. அசுத்தமாகவே உள்ளது. 13 , ஆபிரகாமுடன் கர்த்தரின் உடன்படிக்கை, சீயோஃபால்ஸ், SD, 56-0283 கடைசி கால நெறிதவறல், தாறுமாறு ஓரினச்சேர்க்கை என்னும் தாறுமாறு, நெறி தவறுதலைப் பாருங்கள். கடந்த வாரம் லாஸ் ஏஞ்சலிஸில் கிறிஸ்தவ வியாபாரிகளின் கூட்டத்தில் என்னை பேச அழைத்திருந்த போது, கடந்த ஆண்டைக் காட்டிலும் ஓரினச் சேர்க்கை நாற்பது சதவீதம் அதிகரித்துள்ளதாக செய்தித்தாளின் மூலம் அறிந்தேன். பையன்களும், ஆண்களும் விடுதி அறைகளில் ஒருவரோடொருவர் தங்கி வாழ்க்கை நடத்துகின்றனர். நெறி பிரண்டுவிட்டது. (இயல்பான வாழ்க்கை முறை தாறுமாறாக்கப்பட்டு விட்டது. காரணம், பெண்கள் தங்களை தாங்களே தரம் தாழ்த்திக் கொண்டனர் மேலும், தங்களை பொதுவாக்கிக் கொண்டனர். இது ஆண்களை நெறிதவறச் செய்துள்ளது. பெண்கள் பெண்களுடன் வாழ்வதும், ஆண்கள் ஆண்களுடன் வாழ்வதும் நெறி தவறிய சிந்தையாயுள்ளது. தேவன் எது நடக்கும் என்று உரைத்தாரோ அதுவே நடந்தேறுகிறது. "சோதோமின் நாட்களில் இருந்ததைப் போலவே மனுஷ குமாரன் வருகையின் நாட்களிலும் இருக்கும்" 51, தேவனைக் குறித்து நிச்சயமுடையவர்களாக இருங்கள் கிளெவ்லாண்ட், டென்னாஸி, 59-0708 நீங்கள் படிப்பதும் மற்றும் கேட்பதும் எதுவோ அதுவே உங்கள் சிந்தையை வெளிப்படுத்துகின்றது. இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னர், இடாஹோவில் உள்ள கிறிஸ்தவ வர்த்தகர்களை சந்திப்பதற்காக நானே கார் ஓட்டிச் செல்கையில், மேற்கு மாகாணங்களைக் கடக்கும் போது விளம்பரப் பலகைகளை கண்டுவியப்புற்றேன். சுற்றிப் பார்க்கையில் மக்களின் சிந்தையில் என்னஉள்ளதென்றும், அவர்களுடைய இருதயங்களில் என்ன உள்ளது என்றும் நீங்கள் அவைகளை சுற்றும் முற்றும் பார்க்கும் போது ஏறக்குறைய உங்களால் அறிந்து கொள்ள முடியும். நான் அடிக்கடி சொல்வது போல, ஒரு நபரின் இயல்பு எப்படிப்பட்டது என்பதனை, அவனுடைய வீட்டிற்குச் சென்று, எவ்வகையான இசையை கேட்கின்றனர், எவ்வகையான புத்தகங்களை வாசிக்கின்றனர், எவ்வகையான படங்களை அவர்கள் வீட்டில் வைத்திருக்கின்றனர் என்பதனை வைத்து அந்த நபருடைய குணாதிசயம் என்ன என்று உங்களுக்கு என்னால் சொல்ல முடியும். பிரதிநித்துவம் மூவமாக ஆக்கினை, ஜெபர்சன்வில், 60-1113 முழு உலகமும் களங்கப்பட்டுவிட்டது, கெட்டுப் போய் விட்டது. நாம் அனைவரும் பாவத்தினால் பிறந்து அக்கிரமத்தினால் உருவாக்கப்பட்டிருக்கிறோம். (நாம் உருவாக்கப்பட்டிருக்கும் நிலை ஒரு நல்ல நிலை அல்ல. நம் சிந்தை தீங்காய் கெட்டதாக உள்ளது. நம் ஆத்துமா சீர்கேடாகிவிட்டது. நம் சிந்தனைகள் தொடர்ந்து கேடானதையே சிந்தித்துக் கொண்டிருக்கிறது. மனித மனதில் கற்பனை செய்யப்படும் சிந்தனைகளை எல்லாமே தீங்கானது, ஒரு பாவியாகவே உள்ளோம். மேலும், நம் சாரீரம் பலவீனமானது. நம் ஆவியும் நல்ல நிலையில் இல்லை. மேலும் நாம் முழுவதுமாக சீர் கேடான நிலையில் உள்ளோம். முழு உலகும் களங்கப்பட்டு விட்டது. முழு ஆத்துமாவும், சிந்தையும், உடலும் பாவத்தால் களங்கப்பட்டு விட்டது. அவன் பாவத்தில் பிறந்திருக்கிறான். சரீரப்பிரகாரமாக, அக்கிரமத்தினாலே உருவாக்கப்பட்டு பொய்கள் பேசுகிறவர்களாக உலகத்தில் வந்தோம். அதனால்தான் அவன் ஆத்துமா களங்கப்பட்டுவிட்டது. எதுவும் நன்மையானதாக இல்லை. 55-நீ மறுபடியும் பிறந்தாக வேண்டும். ஜெபர்சன்வில், 61 - 1231M தொலைக்காட்சி மக்களின் சிந்தையை பாழாக்கியுள்ளது இந்நாட்களில் உலகத்தின் காரியங்கள் தற்கால சபைகளை மிக அதிக அளவில் பிடித்திருப்பது மிகவும் மோசமானது. சாத்தான் குரூரமான வழியிலே தொலைக்காட்சி மற்றும் காரியங்களை வீட்டிற்குள் கொண்டு வந்து மக்களின் சிந்தையை பாழாக்கிவிட்டான். இந்நாள் வரை, கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் சபைகளைச் சார்ந்த அதிக சதவீதமானவர்கள், புதன் கிழமை இரவுகளில் ஜெபத்திற்கு செல்லாமல் வீடுகளிலேயே தங்கியிருந்து, அல்லது எங்கோ திரையிடப்படும் தங்களுக்குப் பிரியமான ஹாலிவுட் நடிகர்களின் நிகழ்க்சிகளை காண் கின்றனர். அத்திரைப்படங்கள் திரையிடப்படக்கூடாத அளவிற்கு மோசமாயுள்ளது. மூன்று அல்லது நான்கு கணவர்களுடன் அல்லது மனைவிகளுடன் எல்லாவகையான, எல்லாவிதமான வாழ்க்கையும் வாழ்ந்து கொண்டு வெளியே சென்று மதுபான விருந்துகளுக்கும், புகைப்பிடிப்பதற்கும், சயனிப்பதற்கும் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து கொண்டு... இது தவறானது 35 - நாங்கள் இயேசுவைக் காண வேண்டும். விக்டோரியா BC, 62 0727 சிந்தை பெரிய காரியங்களின் பேரிலேயே இருக்கின்றது. நாம் தலைகீழாக திருப்பப்பட்டு, குலுக்கப்பட வேண்டியதாக இருக்கின்றது. அந்த குலுக்கப்படுதலினால் இந்த நாட்களில் சபைக்குள்ளாக வந்திருக்கின்ற நிறைய உலகமும், மற்றும் காரியங்களும் வெளியே தள்ளப்பட வேண்டியதாக இருக்கின்றது. தேசமெங்கும் பணம் சிதறியிருக்கின்றது. தேவன் பேரில் சிந்தையை வைத்திருப்பதற்கு பதிலாக மக்களின் சிந்தையானது பெரிய காரியங்களின் பேரில் செலுத்த அது செய்திருக்கின்றது. 150, ஏன்? ஹாட்ஸ்பிரிங்க்ஸ், அரிசோனா. 63-0626 அவளைப் பாதுகாக்க ஒரு சோதோமின் சட்டம் உள்ளது தாங்கள் செய்வது இன்னதென்று உணராத அளவிற்கு பெண்கள் சென்று கொண்டிருக்கின்றார்கள். ஒரு அசுத்த ஆவி அவர்கள் மீது உள்ளது. ஒரு பெண் தன்னை காண்பிப்பவளாக ஏன் தன் ஆடைகளை களைகின்றாள்? அது கெட்டது என்பதனை அவள் அர்த்தம் கொள்ளவில்லை அவர்கள்...கண்ணியில் அகப்பட்டுள்ளனர். அது அவர்களுக்குத் தெரியாது. பாருங்கள். அது முன்னொரு காலத்தில் இருந்தது போல, எல்லா இடங்களிலும் பெண்களின் உடல் காட்சிப்படுத்தப்படுகிறது. பாருங்கள். மிகவும் கவர்ச்சியாக, தேவ புத்திரர்கள் ஏறக்குறைய தங்கள் மனநிலையை விட்டு அகலும்படிக்குச் செய்கிறது. அதே நேரத்தில் ஒரு சோதோம் கொமோரா சட்டம் அதிலிருந்து அவளை பாதுகாக்க உள்ளது. எவ்வளவு அவமானத்திற்குரியது. மேலும், நமது அரசாங்கமும் இது போன்ற காரியங்களுக்காகவே நிற்கிறது. 163, தேவனால் அருளப்பட்ட ஒரே ஒரு வழி. சிக்காகோ, இல்லினாய் 63-0731 சிந்தையின் போர் மனித சிந்தை தான் யுத்தத்திற்கென தெரிந்து கொள்ளப்பட்டது. இந்த பெரிய யுத்தமானது பூமியிலே ஆரம்பித்த போது, இருவருக்கும் உகந்த ஒரு இடமானது இருக்க வேண்டியதாக இருந்தது; யுத்தம் ஆரம்பித்து மும்முரமாக யுத்தம் செய்வதற்கென ஒரு இடம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியிருந்தது. ஆகவே அந்த யுத்தக்களமானது மனித சிந்தையில் ஆரம்பித்தது. மனித சிந்தையில் தான் யுத்தம் ஆரம்பிக்கின்றது. யுத்தத்திற்கான இடமாக மனித சிந்தையே தேர்ந்தெடுக்கப்பட்டது. அங்கு தான் அது ஆரம்பித்தது. ஆகவே மனித சிந்தையே போர்க்களமாகும். ஏனென்றால் அங்குதான், மனிதனின் சிந்தையில் தான், தலையில் தான் தீர்மானங்கள் செய்யப்படுகின்றன. பாருங்கள், அது ஒரு போதும் ஏதோ ஒரு ஸ்தாபனத்திலிருந்து துவங்குவதில்லை; ஏதோ ஒரு வழக்கமான காரியத்திலிருந்து ஆரம்பிக்கவில்லை; போர்க்களங்கள் அங்கே இல்லை. ஆகவே ஸ்தாபனம் ஒரு போதும், ஒரு போதும் தேவனுடைய வேலையை செய்யவே முடியாது. ஏனென்றால், உங்கள் சத்துருவை நீங்கள் சந்திக்க வேண்டிய இடமானது எதுவென்றால் உங்கள் சிந்தையே, நீங்கள் உங்கள் தீர்மானத்தை செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள். அது உங்களை சந்திக்கின்றது. தீர்மானங்கள் சிந்தையில், தலையில் செய்யப்படுகின்றன. அங்கே தான் சாத்தான் உங்களை சந்திக்கின்றான். தீர்மானங்கள், ஏனென்றால் தேவன் மனிதனை அந்த முறையில் தான் உண்டாக்கினார். 68 - இதுவரை சண்டையிட்டவையில் மிகப் பெரிய யுத்தம், ஜெபர்சன்வில், 62-0311 சிந்தையே நுழைவாயில் துவக்கத்திலிருந்து இருக்கின்ற உங்கள் போர்க்களமானது இங்கே தான் இருக்கின்றது. இங்கே உங்களுடைய ஆத்துமாவில் இருக்கின்றது, திறந்து கொடுக்கின்ற உங்கள் சிந்தையில் இருக்கின்றது. சிந்தையானது ஆத்துமாவிற்கு இல்லை, ஆவிக்கு வாசலாக இருக்கின்றது. உங்கள் சிந்தையானது திறந்து ஆவியை ஏற்றுக் கொள்ளும் அல்லது ஆவியை வேண்டாமென்று நிராகரிக்கும். 109 - இதுவரை சண்டையிட்டவையில் மிகப்பெரிய யுத்தம், ஜெபர்சன்வில், 62-0311 முதலில் அது உங்கள் சிந்தைக்குள் வர வேண்டும் அதன் பிறகு அவன் என்ன செய்கின்றான்? மனச்சாட்சியை உபயோகப்படுத்த ஆரம்பிக்கிறான். அதை உபயோகப்படுத்த ஆரம்பிக்கிறான். இந்த வடிகாலை உபயோகப்படுத்த ஆரம்பிக்கிறான். அது என்னவாயிருக்கின்றது? அது என்ன? பார்த்தல், சுவைத்தல், உணர்தல், முகர்தல், கேட்டல், கற்பனைகள், ஞாபகம், சொந்த மூளையைக் கொண்டு யோசித்தல், பாசங்கள் ; அவன் இந்த பல வித சிறிய வாய்க்கால்களை அவன் உபயோகிக்க ஆரம்பிக்கிறான், இங்கே இருக்கின்ற இந்த ஒன்றிற்கு மேலாக அவனால் உள்ளே சென்று இருக்க முடிமோ அந்த காலம் வரைக்குமாக அவன் இவ்வாறு செய்து கொண்டிருப்பான். முதலில் அவன் உங்கள் சிந்தைக்குள் வர வேண்டும். அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். 128 - இதுவரை சண்டையிட்டவையில் மிகப்பெரிய யுத்தம், ஜெபர்சன்வில், 62-0311 ஆவிக்குரிய விபச்சாரம் அந்த விதமாகத்தான் விபச்சாரம் அந்த விதமாகத் தான் ஆவிக்குரிய விதத்திலே விபச்சாரமும் செய்யப்படுகின்றது. தேவனுடைய வார்த்தையின்படி சரியென்று அறிந்த பிறகும் கூட, தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக பிசாசின் பொய்யை உள்ளே எடுத்து சிந்தையில் அதனுடன் உறவு (Intercourse) கொண்டு அவ்விதம் செய்கின்றோம். சரியாக ஏவாள் அதைத்தான் செய்தாள். முதலாவதாக சாத்தானின் பொய்யை விசுவாசித்து அதனாலே முதலாவதாக ஆவிக்குரிய உறவை கொண்டு தன்னுடைய சிந்தையின் கருப்பையில் சாத்தானின் பொய்யை ஏற்றுக் கொண்டாள், அது அவளுடைய ஆத்துமாவை மாசுபடுத்தியது. அவளுடைய மரணத்தை வைத்தது; அதன் பிறகு சரீரப்பிரகாரமான உடலுறவு சாத்தானோடு நடந்தது. யார் ஒரு ஸ்திரீயை பார்க்கிறானோ இருதயத்திலே அவளோடு ஏற்கெனவே விபச்சாரம் செய்தாயிற்று - ஸ்திரீயை இச்சையோடு பார்த்தால் அவளோடு ஏற்கெனவே விபச்சாரம் செய்தாயிற்று என்று இயேசு சொல்லவில்லையா? ஏன்? ஏன்? அவள் அதை அவனுடைய சிந்தைக்குள் வரும்படிக்குச் செய்தாள். சிந்தை தான் கருப்பையாகும். அது உள்ளே வந்து தொடர்ந்து காரியங்கள் நடைபெறும்படிக்கு ஆரம்பித்து வைக்கும். 180 - 184 உரைக்கப்பட்ட வார்த்தையே மூல வித்து, ஜெபர்சன்வில், 62-0318E உங்கள் சிந்தையே மூளையைக் கொண்டு யோசித்துப் பார்க்கும்படிக்குச் செய்கின்றது. அதிகமானோர் நிறைய சமயங்களில் ஜெப வரிசையில் என்னிடத்தில் வருவார்கள். அங்கே நிற்பார்கள், "சகோதரன் பிரன்ஹாமே, என்னிடத்தில் நிறைய விசுவாசம் உள்ளது என்று சொல்வார்கள். மலையை பெயர்க்கத்தக்கதான விசுவாசம் உள்ளது என்பார்கள்." ஆனால் அவர்களிடத்தில் எந்த விசுவாசமும் இருப்பதில்லை. மேடைக்கு வருமளவுக்குக் கூட போதுமான விசுவாசம் அவர்களிடத்தில் இருப்பதில்லை. ஆனால் ஒரு காரியத்தைக குறித்து அவர்களுக்கு தெளிவாகத் தெரியும். அவர்கள் விசுவாசம் கொண்டிருக்கிறார்கள் என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சிந்தையைக் கொண்டு அறிவுப்பூர்வமாக விசுவாசிக்கின்றார்கள். ஆனால் அவர்கள் சிந்தை அவர்களை தேவனிடமாக ஒரு போதும் கொண்டு வராது, உங்கள் சிந்தை தான் உங்கள் சொந்த மூளையைக் கொண்டு யோசிக்கும்படி செய்கின்றது. தேவனிடத்தில் மூளையைக் கொண்டு யோசித்தல் என்பது கிடையாது. 70 ,விளங்காத சத்தம், ஜெபர்சன்வில். இண்டியானா, 55 - 0731 இருவரின் சிந்தை ஒன்று போல இருப்பதில்லை ஆனால் இந்த சிறு அமைப்புகளில் தேவன் இருக்கின்றார் என்று நான் நினைக்கின்றேன், முழு காரியத்திலும், ஆனால் மக்கள் ...ஏனெனில் நாம் வித்தியாசப்பட்டவர்களாய் இருக்கிறோம். ஒவ்வொரு மனிதனும் பலவித கோணங்களில் பார்க்கிறான். இரண்டு மனங்கள் சரியாக ஒன்றுபட்டிருக்காது. இரண்டு நபர்கள் தாங்கள் பரிபூரணமாக ஒன்றுபட்டிருக்கிறோம் என்று கூறிக் கொண்டாலும் அவ்விதமாக இருப்பதில்லை. இரண்டு மூக்குகள் ஒன்றாக இருப்பதில்லை. இரு பெருவிரல் ரேகைகள் ஒன்றாய் இருப்பதில்லை. பாருங்கள். நாம் வித்தியாசப்பட்டவர்களாக உண்டாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்மிடையே வித்தியாசப்பட்ட அமைப்புகளும், குழுக்களும் இருந்தாக வேண்டும். 89 - சாயங்கால நேர செய்தியாளன், மெசா, அரிசோனா, 63 - 0116 நம் மனதில் உள்ள காரியங்கள் ஒரு எதிர்மறையான எண்ணத்தை ஒரு போதும் உங்கள் சிந்தையினுள் வர அனுமதிக்காதீர்கள். உங்கள் சிந்தைக்கு நீங்கள் உதவ வேண்டுமானால் எப்பொழுதும் உங்கள் சாட்சியிலும் சிந்தைகளிலும் எல்லாவற்றிலும் ஒரு எதிர்மறையான எண்ணத்தை ஒரு போதும் வர அனுமதிக்காதீர்கள். அது துவங்குமானால், அதை வளர்க்காதீர்கள். நன்று, "என்னால் அந்த எண்ணங்களை வரவிடாமல் தடுக்க முடியவில்லை" என்று சொல்லலாம். நல்லது, அது ஒரு விவசாயி பறவைகள் தன் நிலத்தின் மேல் பறப்பதை தடுக்க முடியவில்லை. என்று சொல்வது போலாகும். ஆனால், அவைகள் இரவில் வந்து தங்குவதை நிச்சயமாக தடுக்க முடியும். அது சரியான காரியமாக இருக்கும். நீங்கள் பாருங்கள்? அந்த சிந்தனைகள் வருவதை உங்களால் தவிர்க்க இயலாது. ஆனால் அவற்றை வளர்க்க வேண்டாம். அது உங்கள் சிந்தையை விட்டு கடந்து போகும்படிக்கு செய்யுங்கள். 18 - நியாயப்பிரமாணம், சிக்காகோ, இல்லினாய், 55 - 0115 நாம் சிந்தையிலேயே அனைத்து காரியங்களையும் கொண்டுள்ளோம் நீங்கள் பாருங்கள், இன்று நம்மிடையே உள்ள பிரச்சனை என்னவெனில், நம்முடைய சிந்தையில் அதிகளவில் பணத்தைப் பற்றியும் காரியங்களைப் பற்றியும் வைத்திருக்கின்றோம், நம்முடைய சிந்தையில் தேவனை குறித்ததான காரியங்களுக்கு இடமே இல்லை. நாம் நகரத்தினுள் சென்று, புதிய ஆடைகளை அல்லது தொப்பிகளை வாங்க வேண்டும் அல்லது வேறொன்றை வாங்க வேண்டும். மேலும் சூசி மற்றும் ஜானை (தொலைக்காட்சி நிகழ்ச்சி) பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறோம். இன்று இரவில் சீட்டாட்டத்திற்கு செல்லுகிறோம். இன்று இரவில் சபைக்கு செல்ல முடியாது. ஏனென்றால், நாம் சூசியை நேசிக்கிறோம் அல்லது அது போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காண விரும்புகிறோம். நம் சிந்தையிலேயே அனைத்து காரியங்களையும் கொண்டுள்ளோம். 27 ,குருடனான பர்திமேயு, துல்சா, ஓக்லஹோமா, 60 - 0330 தேவ மனிதன் தன்னுடைய சிந்தை சுக்கு நூறாக கிழிக்கப்படும்படிக்கு ஆகிவிடுகிறான் அவர்கள் மக்களை சந்திக்கையில். இதற்கான தேவை ஏற்படுகின்றது, மற்றும் அதற்கான தேவை ஏற்படுகின்றது. அப்பொழுது அந்த தேவ மனிதன் தன்னுடைய சிந்தை சுக்குநூறாகும் படியான நிலைக்கு ஆளாகுகிறான். அவன் தன்னுடைய அறைக்கு செல்கையில் அவனுடைய சிந்தையானது மிகவும் சுக்கு நூறான நிலையில் இருக்கின்றது. அவன் ஆராய ஆரம்பிக்கின்றான். "இதோ. இதை நான் செய்தால், அதைக் குறித்து இந்த மனிதன் புண்பட ஆரம்பிப்பான். இதை நான் செய்யவில்லை என்றால், இந்த மனிதன் தவறாக எடுத்துக் கொள்வான்" என்று நினைப்பான். அதன் பிறகு அவன் பிரசங்க மேடைக்கு நடந்து செல்கையில், தான் எங்கே நின்று கொண்டிருக்கிறோம் என்று கூட அவனுக்கு தெரிவதில்லை. அந்த நேரத்தை அவன் தேவனுடன் கழிக்க வேண்டியவனாக இருக்கையில் அவனுடைய மனது, சிந்தையானது சுக்குநூறாக சின்னாபின்னாமாக இருக்கின்றது. அவர்கள் சமூதாயத் தலைவர்கள் அல்ல. தேவ மனிதனானவன் தேவனுடைய ஊழியத்திற்கென்று முற்றிலுமாக அர்ப்பணிக்கப்பட்ட ஒருவனாக இருக்க வேண்டும். அவ்வித மனநிலைமையானது நம்மிடையே இருப்பதென்பது மிகவும் மோசமான ஒன்றாகும் என்பதை நாம் காண்கிறோம். 38 - செல்வாக்கு, ஷ்ரீவ்போர்ட், LA, 63 - 1130B ஆபாச புத்தகங்களின் மீது எந்த ஒரு கவனத்தையும் செலுத்தாதீர்கள் நீங்கள் ஒரு புருஷனாக இருங்கள். இருதயத்திற்கு இனியவராக இருங்கள். நீங்கள் வழக்கமாக செய்வது போல தொடர்ந்து அவளை மதியுங்கள். இந்த அவலட்சண ஆபாச புத்தகங்கள் ஆம், இந்த ஆபாச, பாலுணர்ச்சி காணப்படும் அவலட்சணமான காரியங்களுக்கும் அதில் நீங்கள் வாசிக்கின்ற, இந்த எல்லா ஆபாசத்தின் பேரிலும் எந்த ஒரு கவனத்தையும் செலுத்த வேண்டாம். அந்த அசுத்த காரியத்தை உங்கள் சிந்தையிலிருந்து அகற்றிப் போடுங்கள். 1128 - 306 கேள்விகளும் பதில்களும், ஜெர்சன்வில் COD 64 - 0830M சிறிய பெண் பிள்ளைகளின் சிந்தை கறைப்பட்டு பாழாகுதல் மேலும், நாம் இப்பொழுது நேரிடையாக திரும்ப வந்துள்ளோம். நாம் இங்கு மதிய வேளையில் மேற்கு கடற்கரைப் பகுதியில் வந்து அமர்ந்துள்ளோம். இங்கு பாவத் தடை என்கிற அந்தகாரங்களின் வல்லமைகள் எல்லாம் குவியல் குவியல்களாக இருக்கின்றது. இந்த திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி நடிகர்கள், அந்த காட்சிகளில் மனிதன் பெண்களை முத்தமிடுதல் போன்றவை, சிறு பெண் பிள்ளைகளின் மனங்களை கறைப்படுத்தி பாழ்ப்படுத்துகின்றன. 199 - தேவனால் அருளப்பட்ட ஆராதனை ஸ்தலம், லாஸ் ஏஞ்சலிஸ் கலிபோர்னியா, 65 - 0425E உங்கள் சிந்தையை வெற்றிடமாக வைக்காதீர்கள் உங்களுக்குத் தெரியும். சில நாட்களுக்கு முன் இங்கு நடைபெற்ற கூட்டத்தில் ஒருவர் "உங்கள் சிந்தையை இப்பொழுது வெற்றிடமாக்குங்கள், நேராய் வானத்தை நோக்கிப் பாருங்கள். உங்கள் சிந்தையை வெற்றிடமாக்குங்கள். உங்களுக்கு ஒரு அனுபவம் உண்டாகும்" என்று கூறினார். சந்தேகமின்றி சரிதான். .. ஆனால் என்ன செய்கின்றீர்கள். ஆனால். ஒரு அனுபவத்தை பெறுகிறீர்கள். ஆனால், என்ன அனுபவம். பாருங்கள். நீங்கள் அதை செய்யும்போது, உங்களுடைய ஆத்துமாவை சாத்தானுக்கு திறக்கிறீர்கள். அவன் உங்களுக்கு சிலவற்றை தருவான். அது உண்மைதான். ஆனால் நான் நினைப்பது என்னவென்றால், கிறிஸ்துவிடம் வருகின்ற ஒரு நபர் தான் கொண்டிருக்கின்ற எல்லா விவேகத்துடனும், அவரிடம் வருகையில் வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தையும் தங்கள் சிந்தையில், மனதில் மேற்கோளாக தியானித்துக் கொண்டே வர வேண்டியவர்களாக இருக்கின்றனர். கிறிஸ்துவிடம் வரும் போது உங்கள் சிந்தையை விழிப்புடன் வைத்திருங்கள். அதை வெற்றிடமாக்காதீர்கள். பிசாசு உங்களை எதையுமே செய்ய வைப்பான். புரிகின்றதா? அவை உங்களுக்கு ஒரு உணர்ச்சி வசத்தை தரும். அவனாலும் கூட அதைச் செய்ய முடியும். ஆனால் உங்களுக்கு ஒரு அனுபவம் தேவையாயிருக்கிறது -- வேதாகமம் போதிக்கின்ற ஒன்று, உண்மையானதாக உள்ள ஒரு அனுபவம் தேவையாயிருக்கிறது. E-29 - யூகித்தல், பீனிக்ஸ், அரிசோனா 62-0117 நீங்கள் உங்கள் சிந்தையை, மனநிலையை இழந்து கொண்டிருக்கிறீர்களா பள்ளியில் பிள்ளைகள் கேலி செய்வது நரம்பு தளர்ச்சியுறச் செய்கின்றது சிறு பெண் பிள்ளைகளில் ஒருத்தி பியானோ கருவியை சிறந்த முறையில் கற்றிருந்தாள். அவள் ஒரு சிறு பிள்ளையாக, பதினைந்து பதினாறு வயதாயிருக்கையிலே பாரம்பரிய இசையின் ஆசிரியையாக அவள் இருந்தாள். ஆனால் அவளோடு பள்ளியில் இருந்த மற்ற பிள்ளைகள், அவள் கிறிஸ்தவளாயிருந்து, அவளுடைய வேறுபட்ட காரியங்களைக் குறித்து அவளை கேலி பரியாசம் செய்ய ஆரம்பித்தார்கள். அதனால் அவளுக்கு நரம்பு தளர்ச்சி உண்டாகி பலவீனமடைந்து அவள் தன் சிந்தையை, மன நிலையை இழந்தாள். 52 - நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும். ஜெபர்சன்வில், இண்டியானா உன்னுடைய சிந்தையை இழந்து அவருடைய சிந்தையை கண்டறிந்து கொள்ளுதல் சபையே, நான் மாத்திரமே அல்ல. கடந்த அல்ல. கடந்த இரவு நான் கூறினபடியே, ஒருக்கால் பைத்தியமாக இருக்கலாம். ஆனால் இந்த விதமாக இருப்பதே நலமாக நான் உணர்கிறேன். மற்றைய வழியில் இந்த விதமாக நான் உணர்ந்ததே இல்லை. ஆகவே நான் இந்த வழியினை தரித்திருக்கவே விரும்புகிறேன். ஆம், ஐயா, நான் என் சிந்தையையும், மனதை இழந்து போனது உண்மைதான்; கிறிஸ்துவின் சிந்தையை கண்டறிந்து கொள்ளும்படிக்கு நான் என் சிந்தையை இழக்க வேண்டியதாக இருந்தது. மற்ற ஒவ்வொரு விசுவாசியும் அதைத் தான் செய்ய வேண்டியவனாக இருக்கின்றான். அது சரியே, நம் சொந்த சிந்தையை இழந்து கிறிஸ்துவின் சிந்தையை கண்டடைய அவ்வாறு செய்ய வேண்டியதாக இருக்கின்றது. 164, உலகம் விழுந்து போதல், 63-1115 மாம்ச சிந்தை ரோமர் 8: 5,7 6.மாம்ச சிந்தை மரணம்: ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம் 7. எப்படியென்றால், மாம்ச சிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப் பிராமணத்துக்கு கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. 1 கொரிந்தியர் 3:3 3. பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா? உங்கள் சிந்தையை தவறான காரியங்களின் மேல் வைக்கின்றீர்கள் இன்றைய நவீன கிறிஸ்தவன் அப்படியாகத் தான் இருக்கின்றான் அல்லவா? ஓ, சுகமாக்கப்படுதல் நடை பெறட்டும், அப்பொழுது அவர்கள் அது வெற்றி என்று ஆர்ப்பரிக்கின்றனர். பரிசுத்த ஆவியின் வல்லமை இறங்கும்போது அப்போதும் அவர்கள் வெற்றியை குறித்து கூச்சலிட்டு ஆர்ப்பரிக்கின்றனர். ஆகவே உண்மையாகவே ஆவியால் நிரப்பப்பட்டவர்கள் அவர்கள் வாழ்க்கைப் பிரயாணம் முழுவதுமான அப்படியே நிலைத்து நிற்கின்றனர். ஆனால் இன்னுமாக மாம்ச சிந்தையுடன் நடக்கின்ற ஒரு மனிதன், சிறிது கலக்கமடைந்து சோர்வடையும் போது "உம், அது சரி என்று தான் நான் நினைத்தேன், ஆனால், ஓ, என்னே, இப்பொழுது அது எப்படி இருக்கிறது என்று பார். அந்த சிறு சபை ஒருபோதும் தவறாது என்று நான் நினைத்தேன். அந்த மனிதன் ஒரு போதும்..." என்று கூறுவான். நீங்கள் உங்கள் சிந்தையை, மனதை தவறான ஒன்றில் பேரில் வைத்துள்ளீர்கள். பாருங்கள். ஒருபோதும் தவறாதவறான அவரின் மீது உங்கள் சிந்தையை வையுங்கள். உங்கள் சம்பாஷனைகள் உங்கள் சபையின் பேரிலே இருக்க வேண்டாம், ஆனால் கர்த்தரைப் பற்றியதாக இருக்க வேண்டும். அவரைக் குறித்து தான் இருக்க வேண்டும். உங்கள் அண்டை வீட்டாரைப் பற்றியோ அல்ல, ஆனால் உங்கள் கர்த்தரைக் குறித்தே இருக்க வேண்டும். உங்கள் சம்பாஷனை அவரைக் குறித்தே இருக்க வேண்டும். 133. அவருடைய உயிர்ததெழுதலின் நிருபணம், ஜெபர்சன் வில், இண்டியானா, 55 - 0410M உன்னுடைய சிந்தையின் மூலம் தேவனை நீ அறிய முடியாது இப்பொழுது, இப்பொழுது சற்று கூர்ந்து கவனியுங்கள், நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் மேல் பொய்யறியும் கருவியை பொருத்துங்கள், அந்த உண்மையை தவறானதாக போலியாக மாற்றி, அதுதான் உண்மை என்று கூறி நடிக்க முயற்சிக்கின்றீர்கள். அது தான் உண்மை என்று சொல்ல முயல்கின்றீர்கள். ஆனால் உங்கள் உள்ளத்தின் ஆழத்தில், உங்கள் உள் நிலையில் ஆத்துமா என்று அழைக்கப்படுகின்ற ஒரு இடம் அமைந்திருக்கின்றது. மேலும் இந்த அறிவுப்பூர்வமான சிந்தையானது உங்கள் அமைப்பை ஆள்வதில்லை. உங்கள் சிந்தையானது ஒரு நிர்வாகி போன்றுதான். அது என்ன செய்ய. வேண்டும் என்று நிர்வகிக்கும். அதினாலே (உங்கள் சிந்தை) உங்களை தேவனிடம் கொண்டு வர முடியாது. உங்கள் சிந்தையாலே, அறிவுக்கூர்மையாலே தேவனை உங்களால் அறிந்து கொள்ள முடியாது. அது தாமே உங்கள் பாதை காட்ட ஒரு வழிவகை அல்லது ஒரு வாயக்கால் ஆகும். ஆனால் ஆத்துமா ஒன்றே உங்களை ஆளுகை செய்கிறது. நீங்கள் எப்படியாக இருக்கின்றீர்களோ, அது உங்கள் ஆத்துமாவைக் கொண்டு அதன்படிதான் அமைந்திருக்கின்றது. 64 - விளங்காத சத்தம், ஜெபர்சன்வில், 55 - 0731 மனமாறாத, மாற்றப்படாத ஒரு சிந்தைக்கு பாவம் மகிழ்ச்சிகரமானதாக இருக்கின்றது. மனமாறாத, மாற்றப்படாத இருதயத்துக்கு பாவமானது மகிழ்ச்சி அளிக்கின்ற ஒன்றாய் இருக்கும். மாற்றப்படாத சிந்தைக்கு, மனதிற்கு அது அருமையானதாக இருக்கும். ஆனால் அது மரணத்திற்குரிய வழியாகும். 27. ஆவிக்குரிய நினைவிழப்பு, பர்மிங்காம், AL, 64 - 0411 தேவன் உங்களை ஒரு ஆவிக்கு ஒப்புக் கொடுப்பார் நீங்கள் தேவனுக்கு செவி சாய்க்காவிட்டால், அவர் உங்கள் ஆவியை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும் ஒரு ஆவியிடம் ஒப்புவிப்பார், நீங்கள் கேடான சிந்தையை கொண்டிருந்தது ஒரு பொய்யை விசுவாசித்து அதினாலே ஆக்கினைக்குள்ளாகும்படிக்கு ஒப்புவிக்கப்படுவீர்கள். ஏனென்றால் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமாகிய யூபிலி செய்தியை பெற்றுக் கொள்ள மறுத்ததின் காரணமாகவே இந்த இரவில் ரஷ்யா தேவனுடைய பார்வையில் ஆக்கினைக்குள்ளானதாக காணப்படுகிறது. 89 - யூபிலி வருடம், ஜெபர்சன்வில், இண்டியானா, 54-1003E சிந்தையின் பேரில் சாத்தான் கிரியை செய்தல் சாத்தான் ஏறக்குறைய சரிசமமானவனாக இருந்தான் ஆனால் தேவன் சாத்தானை தமக்கு ஏறக்குறைய சரிசமமான ஒரு நிலையில் வைத்திருந்தார். சாத்தானும் தேவனுடைய காரியங்களை எடுத்து அவைகளை தீமையான சிந்தைகளாக தாறுமாறாக்கிக் கொண்டிருந்தான், அதிலிருந்து அவன் காரியங்களை நல்லதாக ஆக்குவதற்கு பதிலாக அவைகளை தீமையாக மாற்றி தாறுமாறாக்கிக் கொண்டிருந்தான். 12 - தேவனின் ஊழியக்காரன் யோபு, ஃபீனிக்ஸ், அரிசோனா, 55 - 0223 தேவன் இருதயத்தை தெரிந்து கொண்டார் அதே பிசாசைப் பாருங்கள், ஒரு நிமிடம் உங்களை அவனால் நிறுத்த முடியுமானால், உங்கள் சொந்த மூளையைக் கொண்டு யோசிக்க வைக்க அவனால் முடியும். உங்கள் சிந்தையைக் கொண்டு உங்களை யோசிக்க வைக்க பிசாசினால் முடியும். ஆனால் தேவனோ ஒரு மனிதனின் தலையை உபயோகிக்க மாட்டார் தேவன் அவனுடைய இருதயத்தை உபயோகிக்கின்றார். தேவன் அவனுடைய இருதயத்தில் கிரியை செய்கின்றார். அதே நேரத்தில் பிசாசு அவனுடைய தலையின் பேரில் கிரியை செய்கின்றான். தேவன் இருதயத்தை தெரிந்து கொண்டார். "அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்" என்று வேதாகமம் கூறுகின்றது. 17 - ஒரே தலைமையின் கீழ் ஒன்றாகுதல், மிடில் டௌன், ஒஹையோ 58-0326 சாத்தான் உங்கள் சிந்தையினுள் காரியங்களை வைக்கிறான் ஆகவே சரி, நீங்கள் நரம்பு தளர்ச்சியுறுகின்ற நிலையில் இருக்கின்றீர்கள். அதனின்று விலகுங்கள். உங்கள் ஜீவனுக்காக விரைந்தோடுங்கள். வேகமாக ஓடுங்கள். கடந்த காலத்தின் காரியங்கள் எப்படியாக இருந்ததோ அதை அப்படியே விட்டு விடுங்கள், அதைப் பார்க்க வேண்டாம், தேவனை நோக்கிப் பாருங்கள், நீங்கள் சுவிசேஷத்தின் ஊழியக்காரனாக இருக்கிறீர்கள். உங்களிடம் நான் இன்று காலை பேசினேன். அது என்னவென்று உங்களுக்கு தெரியவில்லை, அது என்னவென்று எனக்கும் தெரியவில்லை. ஆனால் இப்பொழுதோ அதை நான் காண்கிறேன். நீங்கள் ஒரு தளர்ச்சியுற்று நிலைகுலைந்து போகும் ஒரு நிலைக்கு வந்து கொண்டிருக்கிறீர்கள். பிசாசு எல்லா காரியத்தையும் உங்கள் சிந்தையில் வைத்துக் கொண்டிருக்கின்றான், எல்லாவற்றிற்கும் எதிராக உங்களை திருப்ப முயற்சித்துக் கொண்டிருக்கிறான், எனக்கு எதிராகவும் திருப்ப முயற்சி செய்து கொண்டிருக்கிறான். அது சரி. அது கர்த்தர் உரைக்கிறதாவது. அதை அப்படியே மறந்து விடுங்கள். அவன் ஒரு பொய்யன் என்று அவனிடம் கூறுங்கள். சரியாக இப்பொழுதே அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது அது உங்களை விட்டு போய்விடும் அது மறுபடியும் திரும்ப வராது. நீங்கள் விடுதலையான மனிதனாக இருப்பீர்கள். 275. சாலோமோனிலும் பெரியவர், இங்கே இருக்கின்றார். 63 - 068 E சிந்தைகள் புரட்டப்படுதல் ஆனால் நீங்கள் பாருங்கள், இன்று நாம் மிகவும் எதிர்மறையாக ஆகிவிட்டோம். அது பிசாசு நம்மை அதன் வழியாக அங்கே அழைத்துக் செல்வதாகும். அது வண்ணமிடப்பட்ட மிட்டாய் குச்சுகள், ஒரு கலைமான், மற்றும் ஒரு மீசை தாடியுடன் இருக்கும் ஒரு மனிதன் விமானம் போல காற்றில் பறப்பதும், தன் முதுகில் ஒரு சிறு மூட்டையில் பொம்மைகளை வைத்துக் கொண்டு ஒவ்வொரு வீட்டையும் சந்திப்பது, முழு உலகையும் பிரயாணித்து, ஒவ்வொரு குழந்தையையும் சந்திப்பது என்பதாகும். அது - அது ஒரு பொய் மாத்திரமே. அது பொய்யிலிருந்து வெளி வந்த ஒன்றாகும். பாருங்கள்? இப்பொழுது பாருங்கள்? ஆனால் அது என்ன? பிசாசு அதைச் செய்தான், ஏனென்றால் அதன் மூலமாக அவனால் மக்கள் சிந்தைகளை புரட்டிப்போட முடியும் என்பதால் தான். 88 - தேவனுடைய வெகுமதிகள் அதன் இடத்தை எப்போதுமே சென்றடையும், ஜெபர்சன்வில், இண்டியானா, 63-1222 மாதவிடாய் சுழற்சி முடிவுறும் நிலை சகோதரியே, எப்படி இருக்கிறீர்கள்? நீங்கள் ஒரு விசுவாசி என்று நான் காண்கிறேன். நீங்கள் சிறிது காலமாக மனசஞ்சலம் கொண்டு வருந்துகிறீர்கள், அப்படித்தானே? உங்களை வருத்தமுறச் செய்யும் ஒன்றை நீங்கள் உங்கள் சிந்தையில் கொண்டிருக்கிறீர்கள். ஆம், நீங்கள், இப்பொழுது இது உங்கள் வாழ்க்கையின் தற்போதைய கட்டம் தான் அதற்கு காரணம். நான் எதைக் குறித்து பேசுகிறேன் என்று உங்களால் புரிந்து கொள்ளக் கூடுமானால் சரி; அது தான் உங்களை ஆட்கொண்டிருக்கிறது. நீங்கள் மிகவும் வருத்தமடைந்து பாதிப்புக்குள்ளாயிருக்கிறீர்கள். நான் எதைக் குறித்து பேசுகிறேன் என்று உங்களுக்குத் தெரியும். மாதவிடாய் வருவது முடிவுறும் நிலை தான் அது. அது தான் உங்களை மிகவுமாக கவலைக்குள்ளாக்கியுள்ளது. சாத்தான் உங்களிடம் பொய் சொல்லுகிறான். உங்களிடமாக உடல் நிலை எல்லாமே பாதிப்படைந்துள்ளது என்றும், நீங்கள் சுகமடையப்போவதில்லை என்றும், உங்கள் வாழக்கையின் முடிவின் நேரம் அருகாமையில் வந்து விட்டது என்றும், சில சமயங்களில் நீங்கள் வாழ்க்கைக் கோட்டை கடந்து விட்டீர்கள் என்றும் நீங்கள் நினைக்கும்படிக்கு அவன் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் அது தவறானதாகும். 82 - ஜீவனுள்ள தேவனுடைய சபை - 51 - 0727 சத்துரு உங்களிடம் சூழ்ச்சியை கையாள முடியும் இப்பொழுது, சத்துரு உங்களிடமாக சூழ்ச்சி செய்ய ஒரு பெரிய தந்திரத்தை தன்னிடம் வைத்துள்ளான். அதாவது நீங்கள் உண்மையில் அழைக்கப்பட்டிருக்கையில், நீங்கள் அழைக்கப்பட்டிருக்கவில்லை என்று நினைக்கும்படி அவனால் செய்ய முடியும், அல்லது மாறாக, நீங்கள் அழைக்கப்படாதிருக்கையில், நீங்கள் அழைக்கப்பட்டுள்ளதாக நினைக்குபடிக்கு செய்ய முடியும். எந்த விதத்திலும், மாறான விதத்திலும் அவனால் செய்ய முடியும். எனவே நீங்கள் விழிப்புள்ளவர்களாய் இருக்க வேண்டும். 515 கேள்வி 107 கேள்வி பதில்கள், COD, ஜெபர்சன்வில், இண்டியானா, 61-0112 உங்கள் புரிந்து கொள்ளுதலின் பேரில் சாத்தான் கிரியை செய்கின்றான். ஆகவே அந்த வாக்குத்தத்தமானது அருகாமையில் வந்து கொண்டிருந்த போது, நிச்சயமாக அதை புரிந்து கொள்ள முடியும் என்று அவர்கள் நினைத்தனர். ஆனால் அந்த தேவனுடைய மக்களோ. வழக்கமாக சாத்தான் சரியாக அவர்களுடைய புரிந்துகொள்ளுதலுடனே கிரியை செய்வான், அப்படியாக அவன் செய்து அவர்கள் புரிந்து கொள்ள முடியாதபடிக்கு அவர்களுடைய புரிந்து கொள்ளுதலை மந்தப்படுத்தி விடுவான் அப்பொழுது அவர்கள் பத்தில் ஒன்பது முறை தேவனை தவறவிட்டு விடுவார்கள். ஆனால் தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தை அங்கே வைத்திருந்தார். ஆகவே அப்பொழுது அவர்கள் விடுவிக்கும்படிக்கு மோசே அங்கே சென்ற போது, என்ன ஆயிற்று, அவர்கள் - அவர்கள் அவனை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். அவனை புறக்கணித்தனர். அவர்கள் அப்படிச் செய்ததால் அவர்கள் நாற்பது வருடங்கள் துன்பத்தை சந்திக்க நேர்ந்தது. 18 - மோசே, ஹூஸ்டன், டெக்ஸாஸ், 50 - 10 உனக்கு நம்பிக்கையே இல்லை என்பதாக காரியம் உள்ளது என்று நினைக்க வேண்டாம். சக்கர நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு உங்களுக்கு நம்பிக்கை அற்ற நிலை என்றும், உங்களுக்கே நீங்கள் உதவி செய்து கொள்ள முடியாத நிலை என்றும் நினைக்க வேண்டாம். உங்கள் நிலை அப்படி அல்ல. அந்த எதிர்மறையான எண்ணமானது உங்களுக்குள்ளாக செல்ல ஒரு போதும் அனுமதிக்க வேண்டாம். அந்த எண்ணத்தை உங்களுக்குள்ளாக நங்கூரமிட வேண்டாம். அந்த எண்ணம் உங்கள் சிந்தைக்குள்ளாக சென்று வருவதை தடுக்க உங்களால் முடியாது (அது சரியே), ஆனால் அதை உங்கள் சிந்தைக்குள்ளாகவே நிறுத்தி விடாதீர்கள். ஒரு வயதான விவசாயி "பறவைகள் என் நிலத்தின் மீது பறந்து செல்வதை என்னால் தடுக்க முடியாது" என்று கூறினது போல தான், ஆனால் அவனிடமாக இரட்டைக் குழல் துப்பாக்கி இருந்தது, அப்போது அவன், "ஆனால் அவை வந்து தங்குவதை என்னால் தடுக்க முடியும்" என்று கூறினான். ஆகவே நீங்களும் கூட அதே காரியத்தைச் செய்யுங்கள். நீங்களும் கூட அவ்விதம் செய்யுங்கள். பாருங்கள்? அவைகளை தங்கவிட வேண்டாம். அவை அப்படியே கடந்து செல்லும்படிக்கு விட்டு விடுங்கள். இப்பொழுது, இதோ நீங்கள் உபயோகிக்க இருக்கின்ற துப்பாக்கி இங்கே உள்ளது. அது புதிய மற்றும் பழைய ஏற்பாடு என்னும் இரட்டைக் குழல் துப்பாக்கி, அது உபயோகிக்க மிக மிக ஆற்றல் வாய்ந்த ஒன்றாகும். நான் உங்களுக்கு கூறுகிறேன். அது எல்லாவற்றையும் உங்களிடமாக வராதபடிக்கு தடுத்து நிறுத்தும். 103 - 105 குருடனான பர்திமேயு, சான் பெர்னாண்டோ CA, 55 - 1115 ஐந்து புலன்களின் போராட்டம் உங்கள் ஆவியானது இன்னுமாக சொந்த மூளையைக் கொண்டு யோசிக்கும். நீங்கள் உறக்கத்தில் இருக்கும் போதோ அல்லது உறங்காத போதோ; உங்கள் சரீரமானது அங்கு அசைவற்று கிடக்கின்றது. ஆனால் இன்னுமாக உங்கள் ஆவியினால் யோசிக்க முடியும் ; உள்ளான மனிதனை இயக்கி கட்டுக்குள் வைத்திருக்கின்ற ஐந்து புலன்கள் அங்கே இருக்கின்றது. 124 - இதை நீ அறியாமலிருக்கிறாய், ஜெபர்சன்வில், இண்டியானா, 65-0815 அங்கே தான் நீங்கள் ஜீவிக்கின்றீர்கள் இப்பொழுது, வெளிப்புறமுள்ள சரீரத்துக்கு நீங்கள் பூலோக வீட்டுடன் தொடர்பு கொள்ள, ஐந்து உட்குழாய்கள் உள்ளன: பார்த்தல், ருசித்தல், உணருதல், முகருதல், கேட்டல் என்பவை. உள்ளேயிருக்கும் ஆவிக்கும் ஐம்புலன்கள் உள்ளன; மனச்சாட்சி, அன்பு போன்றவை. ஆனால் அதற்கும் உள்ளே இருக்கின்ற, ஆத்துமா ஒன்றைக் கொண்டிருக்கின்றது. அங்குதான் நீங்கள் ஜீவிக்கின்றீர்கள். 205. விசுவாசத்தை வெளிப்படுத்துவது கிரியைகள் ஆகும். ஷரீவ்போர்ட், LA, 65-1126 தேவனால் நியமிக்கப்பட்டிருக்கின்ற அந்த ஆத்துமா உள்ளான ஆத்துமாவானது. இங்கே இருக்கிறது. இங்கே உள்ளே, அது தேவனிடத்திலிருந்து வர வேண்டும். ஆனால், அதனால் வெளிப்புறத்திலோ உங்களுக்கு ஐந்து புலன்கள் உண்டு. மேலும் உங்களுடைய பூமிக்குரிய குடியிருப்புடன் தொடர்பு கொள்ள ஐந்து உட்பிரவேச வழிகள் உண்டு. உங்களுடைய உள் பக்கத்திலோ உங்களுக்கு ஒரு ஆவி உண்டு. மேலும் அங்கே உள்ளே உங்களுக்கு ஐந்து வெளிப்பிரவேச வழிகள் உண்டு. உங்களுடைய மனச்சாட்சியும், அன்பும். மேலும் அவ்விதமாக அந்த ஆவிக்கு ஐந்து வெளிப்பிரவேச வழிகள், ஞாபகமிருக்கட்டும், அந்த ஆவியில் தான் நீங்கள் தேவனுடைய மெய்யான ஆவியினால் ஞானஸ்நானம் பண்ணப்படலாம். இருப்பினும் நஷ்டப்பட்டு போகலாம். ஆத்துமா தான் ஜீவிக்கிறதாயிருக்கிறது. அது தேவனால் நியமிக்கப்பட்டதாயிருக்கிறது. 100 - தற்கால நிகழ்ச்சிகள் தீர்க்கதரிசனத்தின் மூலமாய் தெளிவாக்கப்படுகின்றன. 65-1206 கவலையுற்றிருக்கின்ற மனம் பிள்ளைப்பேற்றினைக் குறித்த பயம் சற்று கவனியுங்கள், உங்கள் மனதில் ஒன்றைக் குறித்த கவலை இருக்கின்றது. நீங்கள் வருத்தமுற்றிருக்கிறீர்கள், உங்கள் அருகில் ஏதோ ஒன்று தொங்கிக் கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிகின்றது. நீங்கள்... நீங்கள் ஒரு காரியத்தைக் குறித்து வருத்தமுற்றிருக்கிறீர்கள், அப்படித்தானே? நீங்கள் கவலை யுற்றிருக்கிறீர்கள். இப்பொழுது, என்னிடம் சற்று வெளிப்படையாக இருங்கள் ; அது - அது என்னவென்றால், நீங்கள் ஏதோ ஒன்றைக் குறித்து கவலை கொண்டிருக்கிறீர்கள். இதோ அது எனக்கு தெரியப்படுத்தப்படுகின்றது, ஆம். அது பிள்ளை, பிள்ளைப்பேற்றைக் குறித்ததாகும். நீங்கள் கர்ப்பமுற்று இருக்கிறீர்கள். உங்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுவிடுமோ என்று பயப்படுகின்றீர்கள். அது சரி தானே? கவலைப்படாதீர்கள், முன் செல்லுங்கள், இயேசு கிறிஸ்து... 54 - எதிர்பார்த்தல், நியூ யார்க், 51-0311 கவலை சாத்தானின் ராஜ்யமாகும் சாத்தான் அப்படிப்பட்டவன் தான் ; அவன் அழிப்பவன் ஆவான். சாத்தானின் முழு ராஜ்யமே வியாதி, மரணம், துக்கம், ஏமாற்றம், கவலை போன்றவைகளைக் கொண்டுள்ளது, எல்லாமே சாத்தானுடையது தான். 341 - இதுவரை சண்டையிட்டவைகளில் மிகப்பெரிய யுத்தம் 62-0311 தேவன் அவர்களை அவ்விதமாகவே உண்டாக்கியுள்ளார் ஒரு கறுப்பு இன மனிதன் கொண்டிருக்கின்ற தனிமனித பண்பின் தனிதிறக்கூறுகளில் சில காரியங்கள் வெள்ளை இன மனிதனின் தனிமனித கூறுகளில் இல்லவே இல்லை. ஒரு வெள்ளை இன மனிதன் எப்போதுமே குழப்ப நிலையிலும் கவலையாகவும் இருப்பான் ; ஒரு கறுப்பு இன மனிதனோ அவன் எவ்வாறு இருக்கின்றானோ அந்த நிலையில் அவன் திருப்தியுற்று இருப்பான், ஆகவே அவர்களுக்கு அந்த காரியங்கள் தேவைப்படுவதில்லை. 22 - இன்னும் ஒரு விசை கர்த்தாவே, ஹாட் ஸ்பிரிகஸ், 63-0628M வெளிப்படையாகக் கூறப் போனால், கறுப்பு இனத்தவரின் அநேக பண்புகளை வெள்ளையர் பெற்றுக் கொள்ள வேண்டியவராயிருக்கின்றனர். அவர்களுக்கு எவ்வித கவலையும் கிடையாது. வெள்ளையரைக் காட்டிலும் அவர்கள் ஆவிக்குரியவராகத் திகழ்கின்றனர். வெள்ளையர் நெருங்கவும் கூட முடியாத ஆயிரக்கணக்கான காரியங்களை கறுப்பு நிறமுற்றவர்கள் கொண்டிருக்கின்றனர். தேவன் அவர்களை அவ்விதம் உண்டாக்கியுள்ளார். 131 - மூன்றாம் யாத்திரை, ஜெபர்சன்வில், இண்டியானா, 63 - 0630M கவலையின் காரணமாகவே அது வந்தது என் மனைவி, அவள் அவற்றில் அநேகக் காரியங்களுக்குள்ளாக செல்ல வேண்டியவளாக இருக்கிறாள். அவள் எனக்கும் பொது மக்களுக்கும் இடையில் இருக்கின்றாள். இலட்சக்கணக்கான மக்கள் ஆவர், பாருங்கள்? ஆகவே முன்னொரு நாள் அவளுக்கு முப்பத்தாறு வயதாயிற்று. ஆனால் அவளுக்கோ ஏறக்குறைய முழு தலையுமே நரைத்து வெள்ளையாகிவிட்டது. அது ஏனென்றால் கவலையினால் தான் அப்படியாக ஆனது. நடக்கின்ற ஏற்றத் தாழ்வுகள், இன்னும் பலவித காரணத்தினால் அப்படியாக ஆனது. தேவனே, அவள் மகிமையில் அங்கே வரும்போது அவளுக்கு ஒரு வீட்டைத்தருவீராக. அவர் நிச்சயம் கொடுப்பார். அவர் கொடுப்பார். அதைக் குறித்து நான் திருப்தி கொண்டிருக்கிறேன். ஆகவே ஒரு நல்ல மனைவிக்காக தேவனுக்கு நான் - நான் நன்றி செலுத்துகிறேன். 5 - பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசம், சிக்காகோ, இல்லினாயி, 55-0501 கவலை புற்று நோயை உண்டாக்கும் நீங்கள் முகத்தை சுளித்துக் கொண்டு வைத்திருக்க தேவன் விரும்புவதில்லை. நீங்கள் சந்தோஷமாக இருப்பதையே தேவன் விரும்புகின்றார். சந்தோஷமாக இருக்கவே மானிட இருதயமானது உண்டாக்கப்பட்டுள்ளது. கவலை புற்று நோயை உண்டாக்கும். கோபமும் புற்றுநோயை உண்டாக்கும். ஆகவே ஒருக்காலும் கவலையுற்றிருக்க வேண்டாம். அவருடைய அன்பில் அப்படியே நடவுங்கள். ஆமென். 20 - இயேசு உயிர்த்தெழுந்தார், சிக்காகோ, இல்லினாய், 56 - 405 கவலையினால் எந்த ஒரு பயன் தரும் மதிப்பும் இல்லை பாவம் மரணம் ஆகும். வியாதி பாவத்தை பின் தொடர்கின்றது. கவலை பாவத்தை தொடர்ந்து வருகின்றது. கவலை எவ்வளவு பயங்கரமான ஒன்று என்று எப்போதாவது நீங்கள் கவனித்துள்ளீர்களா? கவலைக்கு எந்த ஒரு பயன் தரும் மதிப்பும் இல்லை. சில சமயங்களுக்கு முன்னர் நகரத்தில் ஒரு மன்றத்தில் ஒரு கூட்டம் மனிதருடன் நான் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது நான் "அதற்கு எந்த ஒரு பயன் தரும் மதிப்பும் இல்லை ஒருக்கால் நீங்கள் காலையில் கொல்லப்படப்போகிறீர்கள் என்று இருக்குமானால், அதை குறித்து கவலைப்படுவது உங்களுக்கு எந்தவிதத்திலும் உதவி செய்யாது" என்றேன். அதில் ஒருவர் ஒரு மாதிரியாக கீழே நோக்கிப் பார்த்து, ஒரு விதமாக சிரிப்பதை நான் பார்த்தேன், அப்போது அந்த மனிதன் "நல்லது, விசுவாசம் என்ன செய்யும்?" என்று கேட்டார். அதற்கு நான் "உங்கள் மன்னிப்புக்கு அது ஒப்புதல் கையொப்பமிடும்" என்றேன். அது சரியே. கவலை, அதற்கு எந்த ஒரு பயன் மதிப்பீடும் கிடையாது. விசுவாசம்... ஆகவே கவலையிலிருந்து நீங்கள் விலகுங்கள், விசுவாசத்தைக் கொண்டிருங்கள்.... 17 - அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்ட போது, ஸ்பின்டேல், NC, 56-0420 கவலை அழுத்தத்தை அதிகப்படுத்தும் உங்கள் எல்லா பாரத்தையும் தாம் எடுத்துக் கொள்வதாக கிறிஸ்து வாக்குத்தத்தம் செய்துள்ளார். உங்கள் பாரங்களை அவர் மீது வைத்து விடுங்கள். ஆகவே நீங்கள் ஏன் எதையும் குறித்து கவலை கொள்கிறீர்கள். கவலை அழுத்தத்தை அதிகரிக்கும்; அழுத்தம் அதிகமாகும் போது வெடித்து விடும். ஆகவே உங்கள் பாரங்களை எல்லாம் அவர் மீது வைத்து விடுங்கள் கவலைப்படுவதை நிறுத்துங்கள். அது சரியே! 101 அழுத்தத்தை வெளியேற்றுதல், ஜெபர்சன்வில், இண்டியானா, 62 - 0513E ஒரு கிறிஸ்தவன் எப்போதுமே இளைப்பாறுகிறான் "ஒரு கிறிஸ்தவ விசுவாசமானது இளைப்பாறுதலின் மீது உறுதியாக அமைக்கப்பட்டிருக்கிறது. அது சரி, ஒரு கிறிஸ்தவன் இப்படியும் அப்படியுமாக புரண்டு ஆடிக்கொண்டிருக்கமாட்டான். ஒரு கிறிஸ்தவன் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஓட மாட்டான். ஒரு கிறிஸ்தவன் அமளி செய்து கொண்டும், கோபத்தினால் பொங்கிக் கொண்டும், காரியங்களைக் குறித்து கவலை கொள்வதும் இல்லை. ஒரு கிறிஸ்தவன் இளைப்பாறுகின்ற நிலையிலே இருக்கின்றான். 72-73 ஏன் மக்கள் இப்படியும் அப்படியுமாக மிகவுமாக புரண்டு கொண்டிருக்கிறார்கள். ஜெபர்சன்வில், 56-0101 ஒடுக்கப்படுதல்/மன அழுத்தமாகிய போர் அப்போஸ்தலர் 10:38 38. நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும், வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார். தேவன் அவருடனே கூட இருந்தபடியினாலே அவர் நன்மை செய்கிறவராயும், பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித் திரிந்தார். பிசாசு உங்களை ஒடுக்க விரும்புகிறான் உங்களை பாரப்படுத்தி உங்களை ஒடுக்குவதே பிசாசுக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. ஒடுக்கும்படியாக பிசாசு வைத்திருக்கும் ஒரு உபாயம் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் ஒரு கிறிஸ்தவன் தன் பிரமாண உரிமைகளை அறியும் போது (ஆமென்), "நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை" என்று தேவனுடைய வார்த்தையை உங்களால் எடுத்து அதை மேற்கோள் காட்டும்போது, அது எல்லா ஒடுக்குதல், இடுக்கண்களையும் எடுத்துப் போட்டு விடும். அப்போது மேகம் போன்று இருண்டதாக இருக்கின்ற காரியங்கள் கலைந்து போக ஆரம்பிக்கும். 21 சுவற்றின் மேல் எழுதப்பட்ட கையெழுத்து, ஜெபர்சன்வில், இண்டியானா, 56-0902 இது உங்கள் கணவரின் காரணமாக நீங்கள் தெற்கிலிருந்து இங்கே இவ்வழியாக வந்திருக்கிறீர்கள். (அது சரியே, தெற்கில் மிஸிஸிப்பியிலிருந்து தெற்குபிரதேசங்களில் தூரத்திலிருந்து வந்துள்ளீர்கள். மேலும்... நீங்கள் ஒரு பிரச்சனையினால் கலக்கமுற்றிருக்கிறீர்கள். அது மனரீதியாக கலக்கமுற்று இருக்கிறீர்கள். அது ஒரு ஒடுக்கப்படுதல் ஆகும், மேலும் நீங்கள் ஒரு ஊழியக்காரரின் மனைவி, உங்கள் கணவரும் உங்களைப் போலவே மனரீதியாக துன்பத்தில் இருக்கிறார், உங்கள் கணவர் மனரீதியாக துன்பத்தில் இருப்பதால் நீங்களும் இந்த நிலையில் துன்பத்தை அனுபவிக்கிறீர்கள். அது சரியே, உங்களுக்கு குடும்பப் பிரச்சனை இருக்கிறது. நீங்கள் விவாகரத்துக்கு தயாராக இருக்கிறீர்கள், உங்கள் கணவர் ஏதோ ஒன்றினால் பிடிக்கப்பட்டுள்ளார். சாத்தான் உள்ளே வந்து அவரை முழு கட்டுக்குள் எடுத்துக் கொள்ள அனுமதித்துள்ளார். 87-விசுவாசம், ஷார்லட் NC 56-0427 ஏழு வருடத்துக்கு ஒரு முறை மனக்கிலேசம் அடைந்து மனம் ஒடுங்குதல் நான் எவ்வளவாக துன்பம் அனுபவித்துள்ளேன் என்று உங்களுக்கு தெரியாது; ஒருவிதமான மனக்கிலேசம். அது ஏழு வருடங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு சமயமும் வந்துள்ளது, என் வாழ் நாள் முழுவதுமாக அப்படியாக இருந்தது. இப்பொழுது நான் அதில் இருக்கிறேன், என் வாழ்க்கையில் எட்டாவது முறையாக ஏழாவது வருஷம் வந்துள்ளது. 143 - பனிவெண்புறா சிறகுகள் மீது, ஷ்ரீவ்போர்ட், LA, 65-1-112E ஊழியத்தில் மன அழுத்த சமயங்கள் இந்தவிதமான ஊழியத்தில் எப்படிப்பட்டதான ஒரு மன அழுத்தம் கொள்ளும் சமயங்கள் வருகின்றன என்று மக்களுக்கு தெரியாது. நான் மிகவுமாக மன அழுத்தம் கொண்டு என் மனைவியை நோக்கி, "நான் அப்படியே போய்விடலாம் என்று நான் விரும்புகிறேன்" என்று கூறினேன், அப்போது அவள், "பில், ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள்?" என்றான். நான் "ஓ, ஓ.... இங்கே எனக்கு தொல்லைகளும் மற்றும் காரியங்களும் உள்ளன" என்றேன். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் "நீங்கள் அவைகளை புறம்பே தள்ளி சென்று விடலாம் என்று எண்ணுகிறாயா? நீ அவைகள் உன்னிடம் வராதவாறு ஒதுங்கிக் கொள்ளலாம் என்று முயற்சிக்கிறாயா?" என்று கூறினது போல காணப்பட்டது. பாருங்கள்? "அப்போது நான், இல்லை, நான் அவைகளுக்கு முன் நிமிர்ந்து நேராக நின்று அவைகளை நேருக்கு நேர் சந்திக்கப்பேனாக, அதை சந்திப்பேனாக, என்றேன். 18 - 20 புத்திர சுவிகாரம் பாகம் 3 ஜெபர்சன்வில், இண்டியானா, 60-0522M தேவன் ஒரு சிறு மனச்சோர்வு வர அனுமதிக்க வேண்டியதாக இருக்கிறது. ஆகவே எப்போதாவது ஒருமுறை வியாதி தம்முடைய சபையை தாக்க தேவன் அனுமதிக்க வேண்டியதாக இருக்கிறது. ஒரு மன அழுத்த ஆவி வந்து சபையிலிருந்து சந்தோஷத்தை சிறிது எடுத்துப்போட அவர் அனுமதிக்க வேண்டியதாக இருக்கின்றது. ஏனென்றால் அவர் தம்முடைய சிறகுகளை விரித்து, தாம் யார் என்பதை உங்களுக்கு காண்பிக்கும்படியாக அப்படியாக அவர் செய்கின்றார். ஆகவே அவர் அப்படியாக செய்கின்றார். ஓ, என்னே, இங்கு ஒரு முள் குச்சியை வைக்கின்றார், அங்கே ஒரு முள்குச்சியை வைக்கின்றார், மற்றும் எல்லா இடங்களிலும் அவர் ஒரு முள்குச்சியை அமைக்கின்றார். ஏன், அது அந்த கூட்டை விட்டு வெளியே செல்ல ஆயத்தமாயிருக்கிறது. 36 - கழுகு தன் கூட்டை கலைப்பது போல், ஹாரிசன்பர்க். VA, 58 - 0316A மன அழுத்தம் என்னும் திரையை அவர் கிழித்தார் "அவர் உன்னதத்திற்கு ஏறி மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார்" என்று வேதம் கூறுகிறது. பூமியின் மீது இருள், அந்தகாரம், மரணம், வருத்தம் என்னும் ஒரு வளிமண்டலமாக தொங்கிக் கொண்டிருந்தது. ஜெபங்களால் மேலே வர முடியவில்லை. ஏனென்றால் பாவ நிவாரணமானது அப்போது செலுத்தப்படவில்லை. ஆனால் அவர் அந்த திரையை கிழித்தார். அவர் வழியைத் திறந்தார். வியாதி என்னும் திரையை அவர் கிழித்தார். பாவம் என்னும் திரையை அவர் கிழித்தார். கவலை என்னும் திரையை அவர் கிழித்தார். மன அழுத்தம் கொண்டிருத்தல் என்னும் திரையை அவர் கிழித்தார். 147 - எபிரெயர் இரண்டாம் அதிகாரம், இரண்டாம் பாகம், ஜெபர்சன்வில், இண்டியானா, 57-0825E ஒரு மனநிலையின் போர் சரியான மனநிலையைக் கொண்ட ஒரு மனிதன் தன் மனைவியை மோசமாக நடத்த மாட்டான். ஆனால் வேதாகமம் கூறுகிறது. "அவன் உன்னை ஆண்டு கொள்வான்" என்று சிருஷ்டிப்பு செய்யும்போது தேவன் கூறினார். ஒரு முதலாளி போல் அல்ல, ஆனால் ஒரு துணையாக இருக்கும்படிக்குத் தான், உங்களில் ஒரு பாகமாக இருக்கும்படிக்குதான். அவள் இனிமையான, அன்பான, மிருதுவான ஒருவளாக இருக்கின்றாள்; நீங்கள் அவளை இனிமையாக வழி நடத்த வேண்டும். ஏனென்றால் அவள் உங்களில் ஒரு பாகமாக பாகமாக இருக்கிறாள். நீங்கள் அவளை மோசமாக நடத்துவீர்களானால், அப்படியானால் நீங்கள் உங்களையே மோசமாக நடத்திக்கொள்கிறீர்கள் என்பதாகும். ஆகவே சரியான மனிநிலையைக் கொண்ட ஒரு மனிதன் அவ்வாறு செய்ய மாட்டான். சரி. 36 - நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும். கிரீன்வில் SC, 58 - 0619B நீங்கள் சோர்ந்து போயிருக்கும் போது அது உங்களுக்கு தொல்லைக் கொடுக்கிறது. நீங்கள் ஒரு காரியத்தைக் குறித்து கவலை கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் மனக்கவலை கொண்டிருக்கிறீர்கள், நிலை குலைந்திருக்கிறீர்கள். அது என்னவென்றால் ஒரு காரியத்தின் பேரில் நரம்பு தளர்ச்சி கொண்டு பயந்திருக்கிறீர்கள். நீங்கள் மிகவுமாக தளர்ச்சியுற்றிருக்கிறீர்கள் அல்லவா, அப்படித்தானே? மனதளவில் தளர்ச்சியுற்றிருக்கின்றீர்கள், உங்களுக்கு ஒருவிதமான காரியங்களை - ஓ, எல்லா விதமான விநோதமான உணர்ச்சிகளை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். அது உண்மை தானே? மேலும் அது மதிய வேளைகளில் உங்களுக்கு வருகின்றது. பிற்பகல் கடந்து சாயங்காலத்தில் நீங்கள் சோர்வடைந்து, தொய்ந்து போயிருக்கின்ற நேரத்தில் அது உங்களுக்கு தொல்லைக் கொடுக்கின்றது. மேலும் நீங்கள்... அது தான் உங்களுக்கு பிரச்சனையை உண்டாக்கி இருக்கிறது. 63 - கர்த்தருடைய தூதன், LA, CA, 51 – 0502 நீங்கள் மிகவும் ஆழ்ந்து சிந்திப்பதினால் அப்படி இருக்கின்றது சகோதரியே, எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறீர்களா? விசுவாசிக்கிறீர்கள் அல்லவா? இப்பொழுது, நீங்கள் மிகவும் நரம்பு தளர்ச்சி, பதற்றம் கொண்ட நபராக இருக்கிறீர்கள். பாருங்கள்? நடுங்கிக் கொண்டும் குதித்துக் கொண்டும் இருக்கின்ற ஒரு பதற்ற நிலை அல்ல. ஆனால் எப்படிப்பட்ட ஒரு நரம்பு தளர்ச்சி என்றால், அது மனதளவிலான நரம்பு தளர்ச்சி ஆகும், ஏனென்றால் நீங்கள் மிகவும் ஆழ்ந்து சிந்திக்கின்ற ஒரு நபராக இருப்பதால் தான், நீங்கள் எப்போதுமே சிந்தித்துக் கொண்டே இருந்து மற்ற மக்களின் பிரச்சனைகளையும் குறித்து சிந்தித்துக் கொண்டே இருக்கிறீர்கள். 52 - எதிர்பார்ப்பு, சிக்காகோ, இல்லினாய், 53-0903 பாலத்தை அடைவதற்கு முன்பே அதைக் கடந்து விடுகிறீர்கள். வாருங்கள்,பெண்மணியே, நீங்கள் இங்கே வருகையில் அவரை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவனுடைய தீர்க்கதரிசியாக எனக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்களா? நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நான் கூறுவதை நீங்கள் செய்வீர்களா? இப்பொழுது பாருங்கள், நீங்கள் சில காலமாக நரம்பு தளர்ச்சியுற்று இருக்கிறீர்கள். அது . . . அது ஒரு . . . அது அது மனநிலையிலான தளர்ச்சியாகும், அது என்னவென்றால் நீங்கள் எப்போதுமே நீங்கள் மிகவுமாக உத்தமமாக மற்ற மக்களின் சிந்தைகளை உங்களுக்குள்ளாக எடுத்துக் கொள்கிறீர்கள். வேறு விதமாகக் கூறினால், பாலத்தை அடைவதற்கு முன்பே அதை நீங்கள் கடந்து விடுகிறீர்கள். நீங்கள் அப்படிப்பட்ட ஒரு நிலையில் இருப்பதால் அது உங்கள் வயிற்றில் அல்சர், குடற்புண் நிலையை உருவாக்கியிருக்கிறது. உங்களுக்கு வயிற்றுக் கோளாறு உள்ளது. உங்களால் சரியாக ஆகாரம் உண்ண முடியாது. 77 - தெய்வீக சுகமளித்தல், 54 - 0620E ஐயா, அந்த ஒரே காரியம் என்னவென்றால், நீங்கள் மிகவும் ஆழ்ந்து சிந்திக்கிறீர்கள், பாலத்தை அடைவதற்கு முன்னதாகவே நீங்கள் அதை கடந்து விடுகிறீர்கள். மற்ற காரியங்களை உங்கள் இருதயத்தின் மேல் போட்டுக் கொள்கிறீர்கள்; மற்றும் நடக்காத ஏதோ ஒன்றைக் குறித்து நீங்கள் எப்போதுமே திட்டமிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அது மனரீதியான தளர்ச்சியாகும். அது சரியே. அநேக வருடங்களாக நீங்கள் அப்படித்தான் இருந்து வருகிறீர்கள், ஆனால் அதை உங்களிலிருந்து எடுத்துப் போட இயேசு கிறிஸ்து இங்கே இருக்கின்றார். 533, இந்த நாளின் மக்களுக்கு உம்முடைய உயிர்தெழுதல் வெளிப்படுதல் LA.CA 54 - 0809E அறிவுப்பூர்வமான சிந்தை ஆகவே வெறும் மெறுகேற்றுதல், சபையைச் சேர்ந்து கொள்ளுதல், மற்றும் மற்றும் அதிகமாக வாசித்தல், நிறைய புத்தகங்களையும் மற்றும் புத்ததகங்களின் ஆசிரியர்களையும் அறிந்து வைத்திருத்தல் போன்ற காரியங்களெல்லாம் உள்ளது என்றால் நீங்கள் மனமாற்றம் அடைந்திருக்கிறீர்கள் என்பதல்ல. நீங்கள் அறிவுக்கூர்மையான சிந்தையைbகொண்டிருப்பதால், எங்கோ ஒரு தேவன் இருக்கின்றார் என்கின்றதான ஒரு மனதளவிலான கருத்தை நீங்கள் பெற்றிருக்க அது செய்கின்றது. ஆனால், இன்னுமாக நீங்கள் ஒரு கிறிஸ் தவன் அல்ல, உங்கள் இருதயத்தையும் உங்கள் சுபாவத்தையும் மாற்றும் கிறிஸ்துவுடனே உங்களுக்கு தனிப்பட்ட ஒரு தொடர்பு கொள்ளாத வரைக்கும் நீங்கள் ஒரு கிறிஸ்தவன் அல்ல. 17 - தேவனை அணுகும் முறை, சிக்காகோ, இல்லினாய், 55 - 0123A ஆத்துமா மற்றும் சிந்தை என்ற இரண்டு மூல கூறுகள் இரண்டு, இப்பொழுது இரண்டு மூலக்கூறுகள் உள்ளன, சில நிமிடங்களுக்கு இந்த பொருளின் பேரில் பேசுவோமாக. ஒரு மனிதனை உண்டாக்குகின்ற இரண்டு மூலக்கூறுகள் உள்ளன. அவைகளில் ஒன்றுதான் உங்கள் சிந்தை ஆகும். மற்றொன்று உங்கள் ஆத்துமா ஆகும். மேலும் உங்கள் சிந்தை தான் உங்கள் அறிவில் விளைந்த மனதளவிலான யோசனை மற்றும் உங்கள் அறிவுக்கூர்மையை கொண்டதாகும். உங்கள் ஆத்துமா தேவனுடைய பாகமாக உங்களுக்குள் இருக்கின்றது. 17 - இயேசு கிறிஸ்து மாறாதவர், காம்பெல்ஸ்வில், கெண்டக்கி, 55 - 0806 மனதின் உணர்ச்சி வசம் அவர்கள் சபையைச் சேர்ந்து கொண்டனர். சிலர் ஒருவித மனதின் உணர்ச்சி வசத்தினாலே சபைக்குள் வந்துள்ளனர். மற்றவர் வார்த்தையைக் குறித்த ஒருவித அறிவுப்பூர்வமான கருத்துடனே வருகின்றனர். அவர்கள் அதைக் குறித்து கேட்டனர். ஆனால் அவர்கள் அதை தங்கள் தலையில் மாத்திரமே விசுவாசித்தனர். ஆனால் அந்த உண்மையான அன்பை பிறப்பிக்க வார்த்தையானது அவர்கள் இருதயங்களுக்குள்ளாக ஒரு போதும் செல்லவில்லை. 62 - அவருக்கு செவி கொடுங்கள், சாஸ்கடூன், சாஸ்கட்சேவான், 57 -0519AL மனதின் விசுவாசம் ஆவிக்குரிய வெளிப்பாடாகி விடுகிறது. நமது விசுவாசத்தின் மிகப் மிகப் பெரிய பாகம் மனதில் எழும் விசுவாசம் ஆகும். வார்த்தையைக் கேட்பதினால் மனதில் தேவனை அறிந்து கொள்ளுதலை அது கொண்டு வருகின்றது. ஆனால் ஓ சகோதரனே, இது மேலேயிருந்து வந்து, இதைத் தொடுமானால், அப்பொழுது அது தேவ பக்தியுள்ள, ஆவிக்குரிய விசுவாசமாகி விடுகிறது. அப்படியானால் அந்த விசுவாசம் என்ன செய்கிறது? அந்த விசுவாசம் வார்த்தையை மாத்திரம் அடையாளம் கண்டு கொள்கிறது. யார் என்ன கூறிய போதிலும் அது வார்த்தையை மாத்திரமே அடையாளம் கண்டு கொள்கிறது. ஏனெனில் ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது (வார்த்தை இப்பொழுதும் தேவனாயுள்ளது) அந்த வார்த்தை தேவனாகி நம்மிடையே வாசம் பண்ணினார். வார்த்தையானது தாமே நமது விசுவாசத்திற்குள்ளாக ஊற்றப்படும்போது நமது மனதின் விசுவாசம் ஆவிக்குரிய வெளிப்பாடாகி விடுகிறது..... 143 - 144 தூஷணமான நாமங்கள், ஜெபர்சன்வில், இண்டியானா, 62-1104M சரியான மனப்பாங்கு அது உண்மை. பாருங்கள், நீங்கள் கொண்டிருக்கின்ற மனப்பாங்கானது உங்களை அதை நோக்கி கொண்டு செல்கின்றது அது... இப்பொழுது சிந்தை அதைச் செய்யாது, ஆனால் ஜீவனைக் கொண்டுள்ள ஒன்றின் மீதான அந்த மனப்பாங்கை அது உங்களுக்கு கொடுக்குமானால், அப்பொழுது அந்த ஜீவனானது கீழே இறங்கி வந்து அதைச் செய்யும். உங்கள் மனப்பாங்கு மாத்திரம் தான் அவருடைய பிரசன்னத்தில் உங்களை கொண்டு வருகின்றது என்றல்ல. அதைத்தான் நீங்கள் செய்கின்றீர்கள். 27 - இயேசுவை எழுப்புதல், டெம்பி, அரிசோனா, 63 - 117 உங்களுடைய சரியான சிந்தையைக் கொண்டிருத்தல் லூக்கா 8:35 35. அப்பொழுது சம்பவித்ததைப் பார்க்கும்படிக்கு ஜனங்கள் புறப்பட்டு, இயேசுவினிடத்தில் வந்து, பிசாசுகள் விட்டுப்போன மனுஷன் வஸ்திரந்தரித்து இயேசுவின் பாதத் தருகே உட்கார்ந்து புத்தி தெளிந்திருக்கிறதைக் கண்டு பயந்தார்கள். 11 தீமோத்தேயு 1:7 7. தேவன் நமக்கு பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். இயேசு கிறிஸ்துவை கண்டடையும் வரைக்கும் எந்த ஒரு மனிதனும் தன்னுடைய சரியான மனநிலையில் இல்லை. மதம் உங்களை பித்துப்பிடித்தவராக பைத்தியக்காரராக ஆக்குகிறது என்று சிலர் கூறுகின்றனர். என்ன, இந்த உலகிலேயே சிறந்த ஒரு மனநிலையை கொடுக்கும் ஒன்று அது மாத்திரம் தான். அது சரியே. இயேசு யாரையுமே பைத்தியமாக்கவில்லை; அவர் மனநிலை குன்றியவர்களை அந்நிலையிலிருந்து விடுவித்தார், அவர்களை சரியான மனநிலையை அடையும்படிக்கு அதை அவர்களுக்கு அளித்தார். அதைத்தான் தேவனுடைய வல்லமை எப்போதுமே செய்தது; வெறிப்பிடித்தவர்களையும் இன்னும் அதைப் போன்றோர்களை விடுதலையாக்குவதை தான் அது செய்கின்றது. அவர்களை விடுவித்து சரியான மனநிலையில் அவர்களை வைக்கும். ஒரு மனிதன் இயேசு கிறிஸ்துவை கண்டடையும் வரைக்கும் அவன் தன்னுடைய சரியான மனநிலையில் முற்றிலுமாக இல்லை. அவன் சரியான மனநிலையில் இல்லை. இப்படியாக நான் கூறுவது மோசமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மையாகும்; நாம் உண்மைகளை சந்தித்துதான் வேண்டும். 30 - நான் ஏன் ஒரு பரிசுத்த உருளையனாக இருக்கிறேன், சிக்காகோ, இல்லினாய். 53 - 0830A கிறிஸ்து உங்கள் சிந்தைக்குள்ளே வருதல் கிறிஸ்து உங்கள் இருதயத்துக்குள்ளே வரும்போது, அப்பொழுது அவர் வாயினுள் வருகிறார். அப்பொழுது உங்கள் கண்களுக்குள்ளாக வருகின்றார், உங்கள் சிந்தைக்குள்ளாக வருகின்றார். அவர் அவர் உங்கள் உங்கள் வாயிற்குள் வருகிறார். அவர் உங்களை வித்தியாசமாக பேசும்படிக்குச் செய்கிறார். நீங்கள் வழக்கமாக எப்படியெல்லாம் பேசினீர்களோ அப்படியாக நீங்கள்பேச மாட்டீர்கள். கிறிஸ்து உங்கள் வாயினுள் வந்து விட்டார். நீங்கள் அவர் பேரில் கொண்டிருக்கின்ற அன்பானது உங்கள் இருதயத்திலிருந்து வளர்ந்து உங்கள் நாவிற்கு கடிவாளம் போடும் வரைக்குமாக அப்படியாகச் செய்கின்றது. சகோதரனே, அது ஒரு மகத்தான காரியமாகும். அடுத்ததாக தெரியுமா, அது வளர்ந்து உங்கள் கண்களுக்குள்ளாகச் செல்கின்றது. அடுத்ததாக நடைபெறும் காரியம் என்ன தெரியுமா, நீங்கள் முன்பு வழக்கமாக பார்த்துக் கொண்டிருந்த இச்சையான காரியங்கள் மறுபடியும் தென்படும் போது உங்கள் தலையை திருப்பி விடுவீர்கள். நீங்கள் வளர்ந்து கொண்டிருக்கிறீர்கள். அதன் பின்னர் முதல் காரியம் என்ன தெரியுமா, நீங்கள் உங்கள் தலையை திருப்புகின்றீர்கள், ஆனாலும் நீங்கள் அதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். பாருங்கள்? சிறிது கழித்து, அது வளர்ந்து உங்கள் சிந்தைக்குள்ளாக வருகிறது ; அப்பொழுது முதல் நீங்கள் அதைக் குறித்து சிந்தித்துப் பார்க்கவே மாட்டீர்கள். பிறகு நீங்கள் ஒரு பெரிய மகத்தான பையனாகிறீர்கள். நீங்கள் கர்த்தருக்காக ஜீவிக்கின்ற முழு முதிர்ச்சிக்குள்ளாக வந்து கொண்டிருக்கிறீர்கள். ஆகவே அப்பொழுது நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளாக புது சிருஷ்டியாகின்றீர்கள். 172 - தெய்வீக சுகமளித்தல், ஜெபர்சன்வில், இண்டியானா, 54 1219M நான் ஒரு கால்வினிஸ்ட் சிந்தனையாளன் இப்பொழுது, ஒரு விசுவாசிக்கு பாதுகாப்புண்டு என்னும் கால்வீனிய கருத்தை நான் கொண்டிருக்கும் காரணம், ஒரு மனிதனோ அல்லது ஒரு பெண்ணோ சரியான மன நிலையில் இருக்கும்போது, அதுவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளத்தக்க தருணம் என்று நான் விசுவாசிக்கிறேன். அப்பொழுதே எல்லாவற்றிற்கும் ஒரு முடிவை எடுத்து அப்படியே அதிலே நிலைகொண்டு விடுங்கள். ஏனெனில் நாம் வாழ்க்கை பாதையின் முடிவுக்கு வரும்போது, நாம் எங்கே, எப்படி வியாதியாயிருப்போம் என்ற நமக்கு தெரியாது. ஒருக்கால் காய்ச்சல் ஏற்பட்டு அதிலே நம்முடைய மூளை மிகவுமாக பாதிக்கப்பட்டு, வாழ்க்கைப் பாதையின் முடிவில் நாம் எதையாவது ஒன்றைக் கூறுவோம் எதையாவது ஒன்றை செய்வோம், நமக்கு தெரியாது ஆனால் பாருங்கள். நாம் ஏற்கெனவே கிறிஸ்துவில் நங்கூரமிடப்பட்டிருந்தால், நமக்கு எப்படிப்பட்ட வியாதி வந்தாலும் அல்லது நாம் என்ன நிலையிலிருந்தாலும், அது ஏற்கெனவே முடிவு பெற்ற செயலாக இருக்கும். 71- ஒரு உண்மையான சாட்சிகாரனின் சாட்சி, ஜெபர்சன்வில், இண்டியானா, 6-1105 ஆவிக்குரிய சிந்தையானது பைத்திய நிலைக்கு ஒரு படி அப்பாற்பட்டது உங்களுக்கு ஒன்றை நான் கூறட்டும். உண்மையான ஆவிக்குரிய சிந்தைகளானது பைத்திய நிலைக்கு ஒரு படி அடுத்துள்ளது. ஒரு அறிவியல் ஆராய்ச்சி அதனை உங்களுக்குசொல்லும். இங்கே நீங்கள் கீழான நிலையில் மெதுவாகவும் மற்றும் திடீர் அக்கறை குறைகின்ற நிலையிலும் இருக்கிறீர்கள் அதன் பிறகு நீங்கள் சிறிது மேலாக ஆவிக்குரியவராக எழும்புகிறீர்கள், அப்பொழுது நீங்கள் இப்படியாக இருக்கிறீர்கள் ; பிறகு மறுபடியாக ஒரு மந்தமான கூர்மையற்ற கோடாரியைப் போல ஆகிவிடுகிறீர்கள்; அதன் பிறகு ஒரு தீட்டப்பட்ட கத்தியாக ஆகின்றீர்கள். இப்பொழுது அங்கே நீங்கள் எந்தப்பக்கத்தில் அதன் மேல் விழுவீர்கள் என்பது உங்களுக்கு தெரியும். ஆகவே ஒரு மனிதன் தன்னை அங்கே மேலே எழும்ப முயற்சி செய்வானானால், அவன் நிச்சயமாக தவறான பக்கத்துக்கு தான் போவான். ஆனால் அங்கே அவனை தேவன் மேலே எழுப்புவாரானால் அப்பொழுது அவன் ஒரு சராசரி மனிதனுக்கு மேலான நிலையில் இருக்கின்றான். அங்கு தான் தரிசனங்களும், காரியங்களும் வருகின்றன. அங்கே தான் தேவனுடைய ராஜ்யம் இருக்கின்றது. கவிஞர்கள், தீர்க்கதரிசிகள் எல்லாரும் நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் என்றே கருதப்பட்டனர். 66 - சாட்சி, ஷ்ரீவ்போர்டு, LA, 63 - 1128M மனநோய், பைத்தியக் காலம் மனநோய், பைத்திய நிலை பரவி வருகிறது அது என்ன? அது மனதளவில் நரம்புக் கோளாறினால் பாதிக்கப்பட்டவர்கள். அமெரிக்கரில் பத்தில் ஒன்பது பேர் மனநல பாதிப்பினால் அவதியுறுகின்றனர் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மனதளவில் பாதிக்கப்பட்டவர்களின் காரியங்களை ஆராய்ந்து வெளிக் கொண்டு வருகிறவர்களாக இருக்க வேண்டிய மனநல மருத்துவர்களும் கூட மிகவும் கோபதாபத்துக்குள்ளாகவும் மனநோய் உடையவர்களாகவும் ஆகிவிட்டனர். அவர்கள் மனநல காப்பகத்தில் பெரிய விலங்கிட்டு கட்டப்பட்டு வைக்கப் பட்டுள்ளனர். பைத்திய நிலையானது தொடர்ந்து முன் சென்று கொண்டிருக்கின்றது. 48 - அப்பொழுது இயேசு வந்து அழைத்தார் - ஜெபர்சன்வில், இண்டியானா, 57 -0407 கல்வி அதன் இறுதி நிலையில் உள்ளது. கல்வி அதன் இறுதி நிலையில் உள்ளது. சிறுவர் புரியும் குற்றம் புரிதலும் (Juvenile delinquency) முடிவின் எல்லைக்கு வந்திருக்கின்றது. சிறு பிள்ளைகள், சிறு பிள்ளைகளின் காரியங்கள் நம்பிக்கை அளிக்கின்ற வகையில் இல்லை, அவர்கள் மிகவுமாக மனநலம் குன்றியவர்களாக ஆகிவிட்டனர். உங்களால் கல்வி கற்க முடியவில்லை. அங்கே இருக்கின்ற பள்ளியில் உங்களால் செல்ல முடியவில்லை, ஒரு சிறு பிள்ளையை அதில் சேர்த்து படிக்க வைக்க முடியாது. அவன் பள்ளியை விட்டு வெளியே வரும்போது உள்ளே சென்ற போது இருந்ததை காட்டிலும் இரட்டிப்பாக நரகத்தின் பிள்ளையாகி விடுகிறான். ஆசிரியர் ஏதாவது கூறினால் அவர் கொல்லப்படுகிறார். அவர்கள் ஒரு சிறு கூட்டமாக சேர்ந்து கொண்டு ஆசிரியர் வெளியே வரும்போது அவரைக் கட்டிப்போட்டு சுட்டுக் கொன்று விடுகின்றனர். இப்படியாக நாம் இரண்டாயிரம் ஆசிரியர்களை இழந்து விட்டோம். ஓ, ஒரு நிமிடம் பொறுங்கள், கடந்த ஆண்டில் இது இருபதாயிரம் ஆசிரியர்கள் என்று நினைக்கிறேன். நான் ஆசிரியர்களைக் குறை கூறி அவர்கள் மீது பழி போட மாட்டேன். நானும் அவர்களுடைய நிலையில் இருந்தால், மாணவர்களுக்கு அறிவரை எதுவும் கூற மாட்டேன். எங்கு பார்த்தாலும் "பிள்ளைகளுக்கு கல்லூரி கல்வி அளியுங்கள்" என்னும் விளம்பரங்களைக் காண்கிறோம். அவர்களுக்கு அது அவசியம் தான். ஆனால் பிசாசு அவர்களை பிடித்துக் கொண்டு விட்டான். ஹாலோவின் (Halloween) கொண்டாட்ட இரவன்று (அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளில் அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படும் ஒரு திருவிழா. பேய், ஆவி, எலும்புக்கூடு, மற்றும் பலவித மாறுவேட ஆடை அலங்காரம் செய்து கொண்டு அன்றிரவு குழந்தைகள் வீடுவீடாகச் சென்று சேட்டை செய்வார்கள் தமிழாக்கியோன்) ஒரு வாசலைப் பிடுங்கி கொண்டு போய் மரத்தின் மீது தொங்க விடுவது, அல்லது விவசாயி ஒருவனின் குதிரை வண்டியை சாலையில் கொண்டு போய் விட்டு விடுவது, இப்படிப்பட்ட செயல்கள் எல்லாம் மாணவர்களுக்கு சாதாரணம் தான். ஆனால் இப்பொழுது அவர்கள் பைத்தியம் பிடித்த செயல்களை புரிகின்றனர். அவர்கள் உங்களை சுட்டு கொலை செய்து, உங்களுக்கு விஷம் கொடுத்து, இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். எனக்கு அடுத்த தலைமுறை இப்படி செயல்படுகின்றன. 211 - தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதை அடையாளம் கண்டு கொண்டு அதன்படி நடத்தல் 60 – 0221 டீன் ஏஜ் பருவத்தில் பைத்தியத்தனம் இந்த டீன் ஏஜ்,வாலிபப் பருவத்தின் பைத்தியத்தனத்தைப் பாருங்கள்! நாம் ஒரு... முன்பொரு நாள் நான் உங்களிடமாக கூறினது போல, நான் வசிக்கும் அரிசோனாவில் உள்ள பள்ளிகளில் அவர்கள் ஒரு ஆய்வு நடத்தினர், பள்ளியில் உள்ள எண்பது சதவிகித பிள்ளைகள் மனவளர்ச்சி குன்றியவர்களாக உள்ளனர் என்று கண்டறிந்தனர். அவர்களுடைய பிள்ளைகள் எப்படி இருப்பார்கள்? நம்மால் இன்னும் ஒரு தலைமுறையை கொண்டிருக்க முடியாது. நாம் முடிவில் இருக்கின்றோம். இந்த காரியங்கள் வரும் என்று இயேசு கூறினார். 190 - தேவனால் அருளப்பட்ட ஆராதனை ஸ்தலம், 65 - 0425E உலகம் முழுவதுமாக மனநலம் குன்றியதாக ஆகிவிடும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் எல்லாமும் இந்த கற்பனைக்குரிய காரியங்களை ஒலிபரப்புவதைப் பாருங்கள். ஆனால் ஒரு சமயம் வரும் அப்பொழுது மக்கள் முழுவதுமாக மன நலம் பாதித்தவர்களாக ஆகிவிடுவார்கள், முழுவதுமாக மனநலம் பாதித்தவர்களாக இருப்பார்கள். உலகமும் அப்படியாக இருக்கும் என்று தான் முன்னறிவிக்கிறேன். இன்று சினிமா படக்காட்சிகளில் காண்பிக்கப்படும் சரித்திரக் காலத்திற்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த மிருகங்கள் ஆயிரமாயிரக்கணக்கான, லட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மிருகங்கள், முட்டையிலிருந்து பொறித்து வெளி வந்து ஒரு பயங்கர தோற்றம் கொண்ட போன்ற பயங்கரமான தோற்றங்களைக் குறித்து வேதாகமம் கூறுகின்றது. ஆனால் நடக்க இருக்கும் காரியங்களோடு ஒப்பிடுகையில் அது ஒரு சிறு காரியம் தான். பாதாளம் திறக்கப்படுகையில் பிசாசு தான் கொண்டிருக்கின்ற எல்லா பயங்கர மர்மமான காரியங்களுடன் வெளியே வருகிறான், அது ஒரு ஸ்திரீ. . . பெண்களைப் போல முடியையும் சிங்கத்தைப் போல பற்களையும் கொண்டுள்ள ஒரு வெட்டுக்கிளிகளைப் போல... பாருங்கள், உலகமானது முற்றிலுமாக முழுவதுமாக மனநலம் குன்றியதாக ஆகிவிடும். அப்பொழுது அது எப்படி இருக்குமென்றால் இப்பொழுது உள்ளதைக் காட்டிலும் ஒருபடி அதிகமாக இருக்கும். 191 - தேவனால் அருளப்பட்ட ஆராதனை ஸ்தலம். LA, CA, 65 - 0425E மக்கள் பைத்தியம், மனநலம் பாதித்த நிலைக்குள்ளாக வளர்ந்து வந்துவிட்டார்கள். எனவே அது முழு உலகத்தையும் பைத்தியத்தில், மனநலம் பாதித்த நிலைக்குள்ளாக ஆழ்த்துகின்றது. காரியம் முழுவதுமே பைத்தியமாயுள்ளது. அது படிப்படியாக உள்ளே நுழைந்துவிட்டது. ஆனாலும் ஜனங்கள் அதை இன்னும் அறியாமலிருக்கின்றனர். 77 - இதை அறியாமல் இருக்கிறாயா, ஜெபர்சன்வில், இண்டியானா, 65-0815 ஆம், அக்காலத்திலிருந்த எந்த வாலிபனும் அதை தான் செய்திருப்பானென்றால், அந்த அதே காரியம் தான் இன்றும் நடந்திருக்கும். அது அன்று பாவமும், தவறாயும் இருந்திருக்குமானால், இன்றும் அப்படியே தான் இருக்க வேண்டும். ஆனால் ஜனங்கள் அதை இன்னும் அறியாமலிருக்கின்றனர். 81 - இதை அறியாமல் இருக்கிறாயா, ஜெபர்சன்வில். இண்டியானா, (65-0815) கற்பனையான மனம், சிந்தை இப்பொழுது, ஆவியானவர் இதை ஆமோதிப்பதை பாருங்கள், கர்த்தரின் நாமத்தினால், ஒரு நேரம் வரப்போகிறது. அப்பொழுது ஜனங்கள் முழுவதும் பைத்தியம் பிடித்தவர்களாக, மனநலம் பாதித்தவர்களாக ஆகிவிடுவார்கள். வேதம் அவ்வாறு கூறுகின்றது. அவர்கள் பயத்தில் கூக்குரலிட்டு அலறுவார்கள் தங்கள் மனதில் பெரிய பயங்கரமானவைகளை கற்பனை செய்வார்கள் ... வானொலிகளும் தொலைக்காட்சிகளும் அத்தகைய பயங்கரமான காட்சிகள் கொண்ட நிகழ்ச்சிகளை தயாரித்து காண்பிக்கின்றன. 165 - இதை அறியாமல் இருக்கிறாயா, ஜெபர்சன்வில், இண்டியானா, 65-0815 சற்று கழித்து மனிதன் பைத்திய நிலையை அடைவான். அப்பொழுது அவன் எறும்புகளை மலை அளவுக்கு பெரிதாகக் காண்பதாக கற்பனை செய்து கொள்வான். வேதனைப்படுத்துகின்ற ஸ்திரீகள் இருப்பார்கள், நீண்ட கூந்தலைக் கொண்ட வெட்டுக்கிளிகள் பூமியில் தோன்றி கூந்தலைக் கத்தரித்துள்ள ஸ்திரீகளை துன்பப்படுத்தும். அவைகளுக்கு ஸ்திரீகளைப் போல் நீண்ட கூந்தல் தொங்கிக் கொண்டிருக்கும்; அவைகளுக்கு சிங்கத்தைப் போல் நீளமான பற்களும் தேளின் வாலில் உள்ள கொடுக்கைப் போல கொடுக்கும் அவைகளுக்கு இருக்கும், பூமியின் மேல் இருக்கும் மனிதரை துன்பப்படுத்தி வேதனைக்குள்ளாக அது ஆக்கும். 22 - கிறிஸ்து தம் சொந்த வார்த்தையின் வெளிப்படுகின்றார் - ஜெபர்சன்வில், இண்டியானா, 65- 0822M எல்லாமே மரித்துக் கொண்டிருக்கின்றது உலகம் மனநலம் குன்றி பைத்தியமாகி விட்டது. கொலைகள் சிறு பெண் பிள்ளைகள் துண்டு துண்டாக வெட்டப்படுகின்றனர் மற்றும் மானபங்கம்படுத்தப்படுகிறார்கள். ஜனங்கள், ஆண்கள் தங்கள் தலைமயிரை பெண்கள் போலவும், பெண்கள் ஆண்களைப் போலவும் வைத்துக்கொள்கின்றனர்; அவர்கள் காரியங்களை தாறுமாறாக்குகின்றனர். மானிட வர்க்கம் மரித்துக் கொண்டிருக்கின்றது. உலகம் மரித்துக் கொண்டிருக்கின்றது. எல்லா காரியங்களும் மரித்துக் கொண்டிருக்கின்றன.சபையும் மரித்துக் கொண்டிருக்கின்றன. 323 - விசுவாசத்தை வெளிப்படுத்து கிரியைகள் - ஷ்ரீவ்போர்ட், LA, 65 - 1126 மக்களில் மனநலம் போய்விடும் இயேசுவே என்னை பின்னால் விட்டு விட்டுச் சென்று விடாதேயும், பிதாவே, உம்முடன் நான் வரட்டும். வரப்போகும் உபத்திரவங்களைக் காண நான் இவ்வுலகில் தங்கியிருக்க விரும்பவில்லை. பைத்தியக்காரத்தனத்தின் மத்தியில் தங்கியிருக்க எனக்கு விருப்பமில்லை, பயங்கரமான காட்சிகள் தோன்றும் போது, இங்கு நின்று கொண்டு காணப்பட நான் விரும்பவில்லை... ஜனங்கள் தங்கள் ஆரோக்கியமான சிந்தையை இழந்து பைத்தியமாகுகின்றனர். மனிதன் மிருகங்களைப்போல் நடந்து கொள்ளவும் மிருகங்களைப் போல் காண முயல்வதை நாங்கள் காண்கிறோம். ஸ்திரீகள் முகங்களில் வர்ணம் தீட்டிக் கொண்டு, மிருகங்களைப் போல் காணப்பட முயல்கின்றனர். இவை யாவும் சம்பவிக்குமென்று முன்னுரைக்கப்பட்டுள்ளது என்று நான் அறிவேன். அவர்களுக்கு பைத்தியம் பிடித்து, வெட்டுக்கிளிகள் ஸ்திரீகளைப் போன்ற தலைமயிர் கொண்டு எழும்பி வந்து ஸ்திரீகளை துன்புறுத்தும், அவைகளுக்கு சிங்கங்களைப் போன்ற பற்கள் இருக்கும். இவைகளை நீர் கூறியுள்ளீர். ஜனங்களுடைய பக்தி நிலை முற்றிலுமாக மாறி, அவர்களுக்கு புத்தி மாறாட்டம் ஏற்படும். கர்த்தாவே, அது ஏற்கெனவே உருவானதை நாங்கள் காண்கிறோம். ஆண்டவரே, எங்களுக்கு உதவி செய்யும். எங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவின் தெளிந்த புத்தியை எங்களுக்கு திரும்ப அளியும். 330 - வழி நடத்தும் தன்மை, கோவினா, கலிபோர்னியா, 65-1207 நரம்புத்தளர்ச்சியான, பதற்றமான காலம் மக்கள் மனோநிலையையும், பதட்டமான காலத்தையும் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற காலத்தை பார்க்கும்போது, கர்த்தாவே, அது அவர்களை புத்தியை இழக்கச் செய்வதை காண்கிறோம். இதைத்தான் வேத வாக்கியங்கள் சரியாக கூறிவாக்குரைத்தது. அது அவ்வாறே நிறைவேறி வருகிறது. பெரிய பயங்கரமான காரியங்கள் பூமியின் மீது வரும் என்று கூறியுள்ளது. 289 - தேவனால் அருளப்பட்ட ஒரே ஆராதனை ஸ்தானம், ஷரீவ்போர்ட், LA,65-1128M மனமாற்றம் அடைந்திருப்பர் ஆனாலும் முழுவதுமாக பைத்தியமாயிருத்தல்: அநேக சமயங்களில் ஒருக்கால் மனநோயால் பீடிக்கப்பட்டிருக்கின்ற ஒரு நபரை உங்களால் காண முடியும். இப்பொழுது, அவர்கள் ஒரு மனந்திரும்பின நபராக, பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவராக, ஆனால் இன்னுமாக முழுவதுமாக பைத்தியம் பிடித்தவர்களாக இருப்பர். பாருங்கள்? அது சரி; அதற்கும் ஆத்துமாவிற்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. அது ஒரு வேதனைக்குட்படுத்துகிறவன் ஆகும் (பாருங்கள்?) அவர்களை வேதனைக்குள்ளாக்குகின்ற ஏதோ ஒன்று 18-பிசாசியல். உடல் சார்ந்த மண்டலம், கானர்ஸ்வில், இண்டியானா, (53-0608) மருத்துவர் உங்களுக்கு சுரப்பு நீர், ஹார்மோன், (hormones) செலுத்த விடாதிர்கள் உங்கள் உடலில் சுரப்புநீர், ஹார்மோன் சுரப்பிகள் சுரப்பது நின்று கொண்டிருக்கின்றது. அது இன்னுமாக சுரக்காது. ஒரு மருத்துவர் உங்களுக்கு எந்த ஒரு சுரப்புநீரை, ஹார்மோன்களை செலுத்த அனுமதிக்காதீர்கள். அதுதான் முதலாவதாக புற்றுநோயை உண்டாக்கும். அவர்கள் உள்ளே செலுத்துவது உயிரணுக்களாகும். நீங்கள் அதை வெளியே வைத்து விடுங்கள். தொடர்ந்து முன் செல்லுங்கள்; தேவனை விசுவாசியுங்கள். புற்றுநோய் என்றால் என்ன, அது உயிரணுக்கள் பெருகுவது தான் தவிர வேறொன்றும் அல்ல. ஒரு சுரப்பி நீர், ஹார்மோன் என்பது... நீங்கள் போதை வஸ்து உபயோகப்படுத்தி, பிறகு அதை உங்களிலிருந்து எடுத்துப்போடுவது போலாகும். என்னே, என்ன செய்வதென்றே உங்களுக்கு தெரியாது. உங்கள் உடலானது சுரப்புநீரை, ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றது. ஆனால் இப்பொழுதோ அது இன்னுமாக சுரப்புநீர், ஹார்மோன்களை உற்பத்தி செய்வதில்லை. புரிகின்றதா? மேலும் அது - அது இயற்கையான காரியமாக உள்ளது. சிறிது காலத்திற்கு பின்னர், அது சரியாகிவிடும். ஆனால் இப்பொழுதோ, அவனால் கூடுமானால் உங்களை பைத்தியமாக்கி விடுவான்.ஆனால் அவன் அவ்வாறு செய்வதற்கு நீங்கள் அனுமதிக்காதீர்கள். சரியாக இப்பொழுதே நீங்கள் கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள். சுகமாகுங்கள். 96 - அன்பு, சாஸ்கடூன், சாஸ்கெட்சேவான், 57-0519E எல்லா காரியமும் சிறு பிள்ளைகளின் மனநலம் பாதிப்புக்குள்ளாகிறது. புற்றுநோய் போலவே சிகரெட்டுகள், புகையிலைகள், விஸ்கி மற்றும் எல்லாமும் சிறு பிள்ளைகளின் மனநலம் பாதிப்புக்குள்ளாகி அவர்களை மனநலக் காப்பகத்திற்கு அனுப்புகிறது, மருத்துவமனைகளுக்கு அனுப்புகிறது. ஒரு நரம்புதளர்ச்சி கொண்ட கூட்டத்தையே பிறப்பிக்கிறது மற்றும் உலகத்தில் உண்டாக்கப்படுகின்ற எல்லாமே.. 76 - முழுமையிலும், சந்தோஷத்திலும் மீட்டிலூயிவில், கெண்டக்கி, 51310 அவர்கள் ஒரு பள்ளிகூட சிறுமியை எடுத்துக் கொள்வது போல, முதல் காரியம் அவர்கள் அவளை சிகரெட்டு புகைக்கச் செய்வார்கள் பாருங்கள்? அந்த செயல் எல்லாவற்றையும் செய்யும்படிக்கு ஆரம்பிக்கிறது. அடுத்ததாக, அவர்கள் செய்கின்ற காரியம் என்னவென்றால், இன்னும் சிறிது அதிகப்படியாக காரியங்கள் ஆகும். அதன் பிறகு செய்யப்பட்ட முதல் காரியம் மாரியூனா (marijuana) கஞ்சா போதை பழக்கத்தில் கொண்டு போய் விடும்; அது முதல் கொண்டு மிக அதிகமாக போதை பழக்க அடிமையாக மாறிவிடுவார்கள். அது என்ன செய்கிறது தெரியுமா? அது அவர்களை அவர்கள் தாறுமாறாக பைத்தியமாக நடந்து கொள்வார்கள், பிசாசு அவர்களை பிடித்துக் கொள்கிறான். புரிகின்றதா? பைத்தியத்திற்குள்ளாக்குகிறது. 480 - 53 கேள்விகளும் பதில்களும், ஜெபர்சன்வி, இண்டியானா, COD59-1223 கோபமே மனநோயின் முதல் நிலை நீங்கள் எப்போதாதாவது கோபம் கொண்ட மூர்க்க வெறியுடன் இருக்கின்ற ஒரு நபரை பார்த்திருக்கிறீர்களா? ஆம், அது என்னவென்றால் - அது அப்படித்தான் இருக்கின்றது. அது பிசாசுகள் ஆகும். அதுதான் அவர்களுக்கு சம்பவித்திருக்கிறது. கோபத்தினால் மூர்க்கவெறி கொண்டிருக்கின்ற ஒரு மனிதனை நீங்கள் காணும் போது "ஒஹ்,ஒ ஒஹ், கதரேனாவில் என்ன சம்பவித்தது என்பதை இப்பொழுது என்னால் அறிந்து கொள்ள முடிகின்றது" என்று கூறலாம். பாருங்கள்? அது முற்றிலுமாக மனநோய்க்குள்ளாக்கி பைத்தியமாக்கும். அதைத்தான் மேயோ மருத்துவமனை மனநோயின் முதல் நிலை என்று கூறுகின்றது. 90 - கேள்விகளும் பதில்களும், ஜெபர்சன்வில், இண்டியானா, COD 59 - 1223 பெண்கள் புகை பிடித்தல் கீழ்த்தரமான காரியமாகும் காரியம் இருபதாம் நூற்றாண்டில் பெண்கள் செய்த மிகவும் கீழ்த்தரமான என்னவென்றால் அவர்கள் சிகரெட்டு புகைக்க ஆரம்பித்தது தான். அது தான் உள்ளுக்குள்ளே விரோதிகள் இருக்கின்றனர் என்று கூறப்படுகின்ற காரியமானது இந்த தேசத்தில் உள்ளதென்றால், பெண்கள் புகைப்பிடித்தல் என்பது அந்த விரோத காரியத்தில் பெரிதான ஒன்றாகும். அது நல்லொழுக்கங்களை உடைத்துப் போடுகின்றது, அது - அது - அது இங்கிருக்கின்ற இந்த மனநல காப்பகங்களை பைத்தியம் பிடித்த மக்களால் நிரப்புகின்றது அது காச நோய், புற்றுநோய் பிடித்திருக்கின்ற மக்களை கொண்டு சென்று மருத்துவமனைகளை நிரப்புகின்றது. எல்லா காரியமும் இந்த சிகரெட்டிலிருந்து தான் உருவாகின்றது. ஆனாலும் ஒரு இதமான உணர்வைப் பெறத் தான் சிகரெட்டை அவர்கள் உபயோகின்றனர். 38 - அவர் விசாரிக்கிறவராய் இருக்கின்றார், நீ கவலை கொள்கிறாய் பீனிக்ஸ், 60-301. கிறிஸ்துவுக்கு வெளியே உங்களுக்கு ஒன்றுமே உதவாது இதை நான் உங்களுக்கு கூறட்டும், தேவனைத் தவிர உங்களை திருப்திபடுத்துகின்ற காரியமானது ஒன்றுமே இல்லை. நீங்கள் விரும்பும் எல்லாவற்றையும் செய்யலாம், நீங்கள் குடித்து வெறிக்கலாம். ஆனால் மானிட இருதயத்தில் கிறிஸ்து தம்முடைய இடத்தை எடுத்துக் கொள்ளும் வரைக்கும் உங்களால் திருப்தியடையவே முடியாது. 30 - ஜீவனுக்கு தாகம் கொள்ளுதல், சிக்காகோ, இல்லினாய், 59 - 0613 கிறிஸ்துவின் சிந்தை ரோமர் 12: 2 நீங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். 1 கொரிந்தியர் 2: 16 : கர்த்தருக்கு போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது. பிலிப்பியர் 2:5 கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது. உங்கள் சொந்த சிந்தையை உபயோகிக்காதீர்கள் இப்பொழுது, நீங்கள் அதை மனதின் கருத்தின் மூலமாக அதை உங்களால் எடுத்துரைக்க முடியும். ஆனால் அது தேவனுடைய உண்மையான வெளிப்பாடாக ஆகும் போது, அது சம்பவிக்கும் முன்னரே நீங்கள் அதை முன்னதாகவே கண்டு, அதை நீங்கள் ஒரு வார்த்தையின் வடிவில் வெளிப்படுத்தி எடுத்துரைக்கும் போது, அந்த வார்த்தையானது காரியத்தை எடுத்து, அதை செயலாக்கத்தில் கொண்டு வரும்: ஒரு எண்ணம் வெளிப்படுத்தப்படுதல் ஆகும். ஓ, என்னே, எப்படி தேவனாலே ஒரு ... பாருங்கள்? உங்கள் இருதயமும் மற்றும் உங்கள் சிந்தையும் தேவனுடைய ஆவியாலே நிரப்பப்பட்டு, உங்கள் சிந்தனைகள் அவருடைய சிந்தனைகளாக மாறும்போது. ... ஆமென், உங்களுக்கு புரிகின்றதா, உங்கள்சிந்தை, உங்களை வழி நடத்துதல், உங்களை வழிகாட்டி கொண்டு செல்லுதல் ஆகியவை நேரடியான ஒன்றாக, உங்களுடைய அழிவிற்குரிய மாம்சத்தை அசைத்து செல்லும் பரிசுத்த ஆவியின் நேரடியான ஊக்குவித்தலாக இருக்குமானால் ...... ஓ என்னே. நாம் எப்படிப்பட்ட மக்களாக இருக்க வேண்டும்? அந்த அதே பரிசுத்த ஆவி தாமே உங்களை உள்ளடக்கி செயலுருப்படுத்தி அல்லது வல்லமைக்குட்படுத்தி அதை அளித்து, அதினாலே நீங்கள் உங்கள் சொந்த சிந்தனைகளை உபயோகிக்காமல், உங்கள் சொந்த சிந்தையை உபயோகிக்காமல், உங்கள் சொந்த கருத்துக்களை உபயோகிக்காமல், மேலும் பரிசுத்த ஆவியானவர் தாமே உங்களை கட்டி உருவாக்கி, உங்கள் எண்ணங்களும் மற்றும் உங்கள் சரீரமும் கூட தேவனுடைய ஆவி தாமே தம்மை உங்கள் மூலமாக வெளிப்படுத்துகின்ற நிலையில் ஆகுமென்றால். எந்தவிதமான ஒரு சபையாக நாம் இருப்போம்? இந்த காலை வேளையில் இந்த பிரன்ஹாம் கூடாரமானது, தேவனுடைய பிரசன்னத்தினாலே மிகவுமாக நிரப்பப்பட்டு, நீங்கள் உங்கள் சொந்த சிந்தையைக் கூட உபயோகிக்காமல், உங்கள் சொந்த கருத்துக்களை கூட உபயோகிக்காமல், உங்களுக்கு பதிலாக ஒரு மாற்று காரியமானது இல்லாமல் இருந்து, ஆவியானவரால் மாத்திரமே நடத்தப்படும்...? அப்படியாக இருந்தால் எப்படிப்பட்ட ஒரு மக்களாக நாம் இருப்போம். 182 - வார்த்தை மாம்சமானது. இந்திய பயணம், ஜெபர்சன்வில், இண்டியானா, 54 - 1002M மாம்ச சிந்தை ஒவ்வொன்றிற்கும் நாம் மரிக்க வேண்டும் கிறிஸ்துவின் சிந்தையை நாம் பெறத்தக்கதாக மாம்ச சிந்தை ஒவ்வொன்றிற்கும் நாம் மரிக்கத் தான் வேண்டும் ; அதினாலே நாம் நம் சொந்த எண்ணத்தின்படி நடக்காமல், ஆனால் அவருடைய சிந்தையைக் கொண்டு நடக்க அப்படியாக செய்தாக வேண்டும்; கிறிஸ்துவின் சிந்தை உங்களில் இருக்க அப்படி செய்ய வேண்டும். நீங்கள் ஜீவித்திருப்பதற்கு உங்களுக்கு இருக்கின்ற ஒரே வழி அது ஒன்று மாத்திரம் தான். 10 - வேறுபிரிதலின் தண்ணீர், சிக்காகோ, இல்லினாய், 55 -0121 மானிட சிந்தை தேவனுக்கு எதிரி ஆகும் மானிட சிந்தை தேவனுக்கு பகை ஆகும். நீங்கள் உங்கள் சொந்த சிந்தையிலிருந்து வெளியே வந்து தான் ஆக வேண்டும், வெளி வந்து தேவனின் சிந்தை உங்களில் இருக்கப் பெற பரிசுத்த ஆவியால் மறுபடியும் பிறக்க வேண்டும். அப்பொழுது உங்களால் அந்த காரியங்களை விசுவாசிக்க முடியும். அப்பொழுது அது ஒரு தத்ரூபமாக, நிஜமான ஒன்றாக ஆகும். 104 - அவருடைய உயிர்த்தெழுதலின் நிரூபணம், ஜெபசர்ன்வில், இண்டியானா, 55 - 0410 M கிறிஸ்துவின் சிந்தை தரிசனங்களையும் மற்றும் வெளிப்பாடுகளையும் கொண்டு வருகின்றது. ஆகவே அசலான விசுவாசம் ஒன்று இருக்கின்றது, ஆனால் அந்த அசலான விசுவாசத்தை கொண்டிருக்க வேண்டுமென்றால் நீங்கள் தேவனுடைய உண்மையான வாய்க்காலுக்குள்ளாக வர வேண்டும். மானிட விசுவாசம் என்ற ஒன்று இருக்கின்றது. பிறகு தேவனில் விசுவாசம் கொண்டிருத்தல் என்பது இருக்கின்றது. ஆகவே நீங்கள் விசுவாசிப்பதற்கு தேவபக்திக்குரிய விசுவாசத்தை கொண்டிருக்க வேண்டும். இப்பொழுது, தேவபக்திக்குரிய விசுவாசத்தை நீங்கள் கொண்டிருக்க வேண்டும் என்றால், நீங்க உங்களுக்குள்ளாக கிறிஸ்துவின் சிந்தையை கொண்டிருக்க வேண்டும். ஆகவே அப்பொழுது தான் தேவன் உங்களுக்கு தரிசனங்களையும் வெளிப்பாடுகளையும் பெறும்படிக்கு அளிக்கின்றார். மேலும் இந்த எல்லா காரியங்களும் உங்களுக்குள்ளாக இருக்கும் கிறிஸ்துவின் சிந்தையினாலே வருகின்றது. உங்களுக்கு புரிகின்றதா? "கிறிஸ்துவுக்குள் இருந்த சிந்தை உங்களிலும் இருக்கக்கடவது." 8 - சேபா ராஜஸ்திரீ, லாங்க் பீச், கலிபோர்னியா, 61 -0219 மணவாட்டி கிறிஸ்துவின் சிந்தையை கொண்டிருக்கின்றாள் பிதாவுக்கும் குமாரனுக்கும் இருக்கின்ற இணக்க ஒத்திசைவைப் பாருங்கள். முதலாவதாக பிதாவானவர் காண்பித்தாலொழிய அது வரைக்கும் இயேசு எந்த ஒரு காரியத்தையும் செய்யவில்லை. யோவான் 5:19. இந்த இணக்கமானது இப்பொழுது மணவாளனுக்கும் மற்றும் அவருடைய மணவாட்டிக்கும் இருக்கப் போகின்றது. அவர் அவளுக்கு தம்முடைய ஜீவ வார்த்தையை காண்பிக்கின்றார். அவள் அதைப் பெற்றுக் கொள்கிறாள். அவள் அதை ஒரு போதும் சந்தேகிப்பதேயில்லை. ஆதலால் அவளை ஒன்றுமே சேதப்படுத்த முடியாது, மரணத்தினாலும் கூட சேதப்படுத்த முடியாது. வித்தானது விதைக்கப்படும் போது, தண்ணீர் அதிகமாக மறுபடியுமாக மேலே எழும்பி வரச் செய்யும், செய்யும், இதோ அதன் இரசியம். வார்த்தையானது மரியாளுக்குள்ளாக இருக்கின்றது. (மரியாளுக்குள் இருந்த விதமாக) மணவாட்டி கிறிஸ்துவின் சிந்தையைக் கொண்டிருக்கிறாள். அதினாலே அவர் வார்த்தையுடன் என்ன செய்யப்பட வேண்டும் என்று அவள் அறிந்து கொள்கின்றாள். அவள் அந்த வார்த்தையின் கட்டளையை அவருடைய நாமத்தினாலே செயல்படுத்துகின்றாள், ஏனென்றால் அவள் "கர்த்தர் உரைக்கிறதாவது" என்பதைக் கொண்டிருக்கின்றாள். அப்பொழுது அந்த வார்த்தை ஆவியானவராலே உயிர்ப்பிக்கப்பட்டு, அது நிறைவேறுகின்றது. பெர்கமு சபைக்காலம் - எழு சபைக் கால புத்தகம், 5-ஆம் அத்தியாயம் உங்கள் சிந்தையே உங்கள் குணாதிசயத்தை உண்டாக்குகிறது நாம் அவருடைய குணாதிசயத்தை நமக்குள்ளாக இருக்கும்படிக்கு அனுமதிப்போமானால், அப்பொழுது நாம் கிறிஸ்துவின் சிந்தையை - அவருடைய குணாதிசயமான சிந்தையை கொண்டிருப்பதனால் குமாரர்களாக ஆகின்றோம். உங்கள் சிந்தை உங்கள் குணாதிசயத்தை உருவாக்கின்றது. "இந்த சிந்தை...கிறிஸ்துவின் சிந்தை.... கிறிஸ்துவிலிருந்த சிந்தை உங்களிலும் இருக்கக்கூடவது" என்று பவுல் கூறுகின்றான். கிறிஸ்துவின் அந்த சிந்தை உங்களில் இருக்கட்டும். அது தாமே தேவனுடைய குமாரனின் சிந்தையை உருவாக்கி அமைக்கின்றது. 51 - அடையாளப்படுத்துதல், பீனிக்ஸ், அரிசோனா, 630123 கிறிஸ்துவின் சிந்தை வார்த்தையை அடையாளம் கண்டு கொள்ளும் கிறிஸ்துவின் சிந்தை நமக்கும் இருக்குமானால், அப்பொழுது அந்த வார்த்தையானது சத்தியம் என்று நாம் அடையாளம் கண்டு கொள்வோம். அப்பொழுது அது நம்மில் ஜீவிக்கும். நீங்கள் அதை தவிர்க்க முடியாது. அது கிறிஸ்துவாகும்! 196 உலகம் விழுந்து போதல், ஷரீவ்போர்ட், LA, 63 - 1127 தெய்வீகம் மானிட சரீரங்களில் வெளிப்படும் அந்த காரியமானது வந்து கொண்டிருக்கின்றது என்று நான் விசுவாசிக்கின்றேன், சபையானது மிகவுமாக அந்த பரிசுத்த ஆவியாகிய கிறிஸ்துவினால் சுற்றப்பட்டு, தங்களிலிருந்து மானிட காரியமானது தூர இருந்து, தங்களைத் தாங்களே காணாமல் தாங்கள் ஒன்றுமே இலலை... (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி) தேவனுக்கு சேவை செய்வதைத் தவிர வேறுசிந்தை எதுவும் இல்லாமல் இருப்பது, மேலும் அவர்களுடைய சிந்தனைகள் முன் சென்று கொண்டே இருக்கின்றது. அவர்கள் உலகத்தின் காரியங்களை மறுப்பார்கள். அவர்கள் ஆவியிலே அசைந்து தொடர்ந்து முன் செல்வார்கள், ஆவியிலே வாழ்வார்கள், ஆவியிலே அசைந்துசெல்வார்கள், ஆவியிலே நடப்பார்கள், கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்றுவார்கள். அப்பொழுது, மானிட இருதயத்தில் கிறிஸ்துவின் அன்பானது பரிசுத்த ஆவியிலே அசைக்கப்பட்டு முன் சென்று, அந்த மகத்தானசபையானது வல்லமையுடனும் மற்றும் தெய்வீக தன்மையுடனே முன் செல்லும் ஏனென்றால் தெய்வீகமானது பரிசுத்த ஆவியாலே மானிடர்களில் வெளிப்படுத்தப்பட்டு, அவர்களுடைய சிந்தை எண்ணங்களை நிறைவேறும்படிக்குச் செய்யும். 183 - வார்த்தை மாம்சமானது, இந்திய பிரயாணம், 54 - 1003M அவர் உங்கள் மனதின் மூலமாக சிந்திக்கின்றார் அவர் பாவியினிடமாக தாம் எந்த குரலில் பேசுகின்றாரோ அந்தக் குரலிலே அவர் அவனிடமாக பேசுகின்றார். ஒரு விபச்சாரியிடம் தாம் எந்த குரலில் பேசுகின்றாரோ அதே குரலில் அவளிடமாகவும் பேசுகின்றார். அவர் பூமியில் இருந்தபோது எப்படியெல்லாம் பேசினாரோ அதே போல அவர் உங்கள் இருதயத்திற்கு பேசுகின்ற அந்த அதே ஆலோசனைகளை உங்கள் சொந்த மனதின் மூலமாக அவர் சிந்திக்கின்றார். ஆகவே நீங்கள் அவரிடமாக சரணாகதி ஆகும் போது அப்போது நீங்கள் உங்கள் சுயத்தினாலே செயல்படுவதில்லை. 128 - எதைக் குறித்து மக்கள் மிகவுமாக முன்னும் பின்னும் அசைந்தாடிக்கொண்டிருக்கிறார்கள். ஜெபர்சன்வில், 56 - 0101 அவர் மரித்தபடியே நீங்கள் மரித்து ஆக வேண்டும் எப்படி ஒன்று உயிர் வாழ்கின்றதோ அதே போல தான், மறுபடியுமாக உயிர் வாழ்கின்ற எந்த ஒன்றும், முதலாவதாக அது மரிக்க வேண்டும். ஆகவே நீங்கள் இன்னுமாக அந்த அதே ஆவியை வைத்திருக்க முடியாது. அவர் மரித்ததுபோல நீங்களும் மரித்தாக வேண்டும்! ஆபேல் தன்னுடைய ஆட்டுக்குட்டியுடன் செய்தது போல நீங்கள் அவருடைய பீடத்தின் மேல் மரிக்க வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள். உங்கள் ஆட்டுக்குட்டியானவருடனே நீங்களும் மரிக்க வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள். நீங்கள் மரித்துத்தான் ஆக வேண்டும். அவருடைய சிந்தனைக்கு பிறக்க நீங்கள் உங்கள் சொந்த சிந்தனைக்கு மரித்து கிறிஸ்துவின் சிந்தை உங்களில் இருக்கும்படிக்காக அப்படி செய்யவேண்டும். நீங்கள் அவருடைய சிந்தனைகளை சிந்திக்க வேண்டும். ஆகவே இப்பொழுது, சகோதரனே, சகோதரியே, என்னால் கூடுமான வரைக்குமாக இதை நல்லவிதமாக தெளிவாக என்னால் கூற முடிகின்றதோ அந்த விதமாக நான் கூறட்டும். நீங்கள் அவருடைய சிந்தைகளை சிந்தித்து அதே நேரத்தில் அவருடைய வார்த்தை மறுதலித்து, நீங்கள் மறுபடியும் பிறந்தவர்கள் என்று எப்படி உங்களால் உரிமை கோர முடிகின்றது? அந்த கேள்வியை இப்பொழுது சற்று உங்களிடமாக கேட்டுக் கொள்ளுங்கள். அந்தவிதமாக உங்களால் எப்படி செய்ய முடிகின்றது? அப்படி உங்களால் இருக்க முடியாது. கிறிஸ்துவின் சிந்தை உங்களில் இருந்தால் அப்பொழுது நீங்கள் புது சிருஷ்டியாயிருக்கிறீர்கள். வேதாகமம் அதை போதிக்கின்றது. 64 ,நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும், ஜெபர்சன்வில், இண்டியானா, அவர் உங்கள் சிந்தையை நிரப்ப விரும்புகிறார் ஆகவே தேவன் தம்முடைய சபையின் ஒவ்வொரு நரம்பிழையையும் திரப்ப விரும்புகிறார். உங்கள் எண்ணும் எண்ணங்களை அவர் நிரப்ப விரும்புகிறார். அவர் உங்கள் சிந்தையை நிரப்ப விரும்புகிறார். உங்களின் ஒவ்வொரு சிறு துகள்களையும் கூட அவர் நிரப்ப விரும்புகிறார். அதினாலே நீங்கள் தானே உங்கள் சொந்த எண்ணங்களும் உங்களுக்கு முழுவதுமாக, முற்றிலுமாக மரிக்கும்படியாக ஆகும்படிக்குச் செய்து, தேவனிடமாக முழுவதுமாக சரணடைந்து அவருடைய வார்த்தையானது உங்களுக்குள்ளாக உங்கள் மூலமாக ஜீவிக்கும் படிக்கு அப்படிச் செய்கின்றார். தேவனுடைய வார்தையைத் தவிர வேறொன்றுமே உங்களுக்குத் தெரியாது. அவருடைய வார்த்தையுடனே அப்படியே தரித்திருங்கள் அது தான் ஜீவனாகும். 189 - ஒன்றாயிருத்தல், ஜெபர்சன்வில், இண்டியானா, 62-0211 உங்கள் சிந்தையை அவர் மீது வையுங்கள் தேவன் நம் அருகில் வருகின்றார் நாம் எப்போதும் போல தேவனைப் பற்றி நாம் சிந்திந்துக் கொண்டு, நம் சிந்தனைகளை தேவன் மீது வைத்திருக்கையில் தேவன் நம் அருகில் வருகின்றார் என்பது உங்களுக்கு தெரியும். இந்த நாளில் மக்களிடம் இருக்கின்ற பெரிய பிரச்சனைகளில் ஒன்று என்னவென்றால் நாம் நம் சிந்தையில் மிக அதிகளவில் மற்ற காரியங்களையே நாம் வைத்திருக்கிறோம் என்பதே என்று நான் நினைக்கிறேன். 9 - மரியாளின் விசுவாசம், லாஸ் ஏஞ்சலிஸ், கலிபோர்னியா, 59-0404 தேவ தூதர்கள் உங்களுக்கு தோன்ற வேண்டுமா தேவன் தூதர்கள் உங்களிடமாக தோன்ற வேண்டும் என்று விரும்புகிறீர்களா, அப்படியானால் உங்கள் சிந்தையை தேவன் மீது வைத்து உலகத்தின் காரியங்கள் எல்லாவற்றையும் சிந்தையிலிருந்து தள்ளிப் போடுங்கள். உங்கள் பணிகளை தொடர்ந்து செய்யுங்கள் : உங்கள் சபைக்குச் செல்லுங்கள் ; உங்கள் பாத்திரங்களை விளக்கும் பணியை தொடர்ந்து செய்யுங்கள் ; எங்கு சென்றாலும் பகல் முழுவதுமாக, இரவு முழுவதுமாக உங்கள் சிந்தையை அவரின் மீது வைத்திருங்கள். அப்பொழுது தேவன் உங்களுக்கு ஏதாவதொன்றைச் செய்வார். நீங்கள் அவரிடமாக நெருங்குகிறீர்கள்; உலகமானது உங்களுக்கு மூடப்பட்ட ஒன்றாகச் செய்து விடுகிறீர்கள்; நீங்களும் அவரும் மாத்திரமே ஒன்றாக இருக்கிறீர்கள். 24 ,அற்புதங்களின் யெகோவா, சான் ஜோஸ், கலிபோர்னியா, 59 - 1126 இரவும் பகலும் தேவன் மேலே உங்கள் சிந்தையை வையுங்கள் "நீங்கள் என்னிடத்திலே நெருங்கும் போது நானும் உங்களிடமாக நெருங்கி வருவேன்" என்று கர்த்தர் கூறுகிறார். அவரைக் குறித்தே சிந்தியுங்கள். என் படுக்கையின் மீது அவருடைய கற்பனைகளை எழுதி இரவும் பகலும் அதையே தியானிப்பேன் என்று தாவீது கூறினான். அதைத்தான் சபையும் செய்தாக வேண்டும். அது உங்கள் இருதயமானது இரவும் பகலும் தேவனுடன் ஒன்றிணைந்து இணக்கத்துடன் (tuned) இருக்கும் படிக்குச் செய்ய வேண்டும், அப்பொழுது அப்படியிருக்கையில் அவர் தோன்றுவார். "இருதயத்தின் நினைவு எப்படியோ அப்படியே அவன் இருக்கிறான்" என்று சாலொமோன் கூறுகிறான். நீங்கள் அவருடைய பிள்ளைகளில் ஒருவன் என்றும், அவர் உங்களை இரட்சித்தார் என்றும், அவர் உங்களுக்கு நல்லவராக இருக்கிறார், நீங்கள் அவரை நேசிக்கிறீர்கள், அவரும் உங்களை நேசிக்கின்றார் என்று சிந்திக்க ஆரம்பியுங்கள், நீங்கள் சபைக்கு செல்லும் வரைக்குமாக காத்திருக்கலாம் என்றோ அல்லது ஒரு வசதியான நேரம் வரும் வரைக்கும் இருக்கலாம் என்று காத்திருக்க வேண்டாம் ; எல்லா நேரமும் உங்கள் மனதை அவர் மீது வைத்திருக்க மாத்திரம் செய்யுங்கள். 22-அற்புதங்களின் யெகோவா, சான் ஜோஸ், கலிபோர்னியா, 59 - 1129 அவரைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருங்கள் உங்கள் சிந்தையை அவர் மீதே வைத்திருங்கள், அவரைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருங்கள், அவர் எவ்வளவு அருமையுள்ளவர் என்றும், அவர் எவ்வளவு இனிமையானவரென்றும், அவருடைய வாக்குத்தத்தங்களைக் குறித்தும் சிந்தியுங்கள். நீங்கள் வியாதிப்பட்டிருந்தால், "அவர் என்னுடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டார்; அவர் என்னுடைய அக்கிரமங்களினிமித்தம் நொறுக்கப்பட்டார்; எனக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால்தான் குணமானேன? என்று உங்கள் சிந்தையில் கொண்டு வாருங்கள். அந்த விதமாக உங்கள் சிந்தையை மையப்படுத்தி வையுங்கள்; அப்பொழுது ஏதோ ஒன்று உங்களுக்கு சம்பவிக்கும். திடீரென்று ஏதோ ஒன்று உங்கள் அருகில் வரும், ஒரு அபிஷேகமானது உங்கள் மீது வரும் அப்பொழுது நீங்கள் அந்த நாற்காலியிலிருந்து எழுந்து செல்வீர்கள். "நீங்கள் கர்த்தரிடத்தில் நெருங்கிச் செல்லுங்கள் அப்பொழுது அவர் உங்களிடமாக நெருங்கி வருவார்." 26 - அற்புதங்களின் யெகோவா, சான் ஜொஸ், கலிபோர்னியா 59 - 1129 கிறிஸ்துவைப் பற்றியே பேசிக் கொண்டிருங்கள் இந்நாட்களில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவைத் தவிர மற்ற எல்லாவற்றையும் குறித்தும் பேசுகிறார்கள். வெளியே செல்கின்றனர், எல்லாவற்றைக் குறித்தும் பேசும் படிக்கும் மற்றும் முட்டாள் தனமானவைகள் நிறைய பேசும்படிக்கு வைத்திருக்கிறார்கள். ஆனால் கிறிஸ்துவைக் குறித்து ஒரு போதும் பேச மாட்டார்கள். அவரைக் குறித்தே பேசுங்கள்; அவரைக் குறித்து பாடுங்கள்: அவரை நேசியுங்கள்: அவரை உங்கள் இருதயத்திலும் சிந்தையிலும் இரவும் பகலும் வைத்திருங்கள். தாவீது, கற்பனைகளை தன் விரல்களின் மீதும் தன் கட்டிலின் மீதும் கட்டி வைத்து, அதினால் அவர் எல்லா நேரங்களிலும் தனக்கு முன்பாக இருப்பார் என்பதாகக் கூறியிருக்கிறான். அது தான் வழியாகும்: ஞாபகத்திலும், எண்ணங்களிலும், துதிகளிலும், பேச்சிலும் அவரை வையுங்கள். செய்ய வேண்டியதெல்லாம் என்னவென்றால் கிறிஸ்துவை உங்களுக்கு முன்னர் வைத்திருத்தல் என்பதே ஆகும். அந்த விதமாகத்தான் அவரை உங்கள் அருகில் நீங்கள் வைத்திருக்க முடியும். 33 - காலத்திரைக்கு அப்பால், பீனிக்ஸ், அரிசோனா, 55 - 0302 மிகுந்த பயபக்தியுடன் சபைக்குச் செல்லுங்கள். இப்பொழுது நாம் மிகுந்த பயபக்தியுடன் சபைக்கு வர வேண்டும். நாம் தேவனுடைய உண்மையான பரிசுத்தவான்களாக சபைக்குள்ளாக வந்து, நடந்து சென்று நம் ஸ்தானத்தை எடுத்துக் கொண்டு நம்முடைய சிந்தைகளை கிறிஸ்துவின் மேல் வைக்க வேண்டும். அந்த விதமாக நாம் உலகத்தின் ஒவ்வொரு காரியத்தையும் விட்டுவிட வேண்டும். நீங்கள் உண்மையாகவே மறுபடியும் பிறந்தவர்களாக இருந்தால்.... இப்பொழுது இது சிறிது வெட்டுகின்றதாக இருக்கும், ஆனால் இது திருத்தப்படுதலின் வீடு என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் உண்மையாகவே தேவனுடைய ஆவியினாலே பிறந்திருப்பீர்களானால் எப்படியாயினும் அங்கே தான் உங்கள் இருதயம் இருக்கும். அது தான் ... உங்கள் இருதயமும் இருக்கும். அது தான்... உங்கள் சிந்தனைகள் அங்கே அக்கரையிலே நங்கூரமிடப்பட்டிருக்கும் 63 நியாயப்பிரமாணம் அல்லது கிருபை, ஜெபர்சன்வில், இண்டியானா, 54 - 1006 உங்கள் எண்ணங்களை நேர்மறையாக, ஐயத்திற்கிடமில்லாத விதமாக வைத்திருங்கள் நீங்கள் தெய்வீக சுகமளித்தலைப்பற்றி நினைக்க ஆரம்பிக்கையில், கிறிஸ்துவைப் பற்றி நினைக்க ஆரம்பிக்கையில்..... உங்கள் சிந்தையை அவரில் வைத்திருங்கள். "புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள்" என்று வேதாகமம் கூறுகின்றது. அப்பொழுது, "ஆம், ஒருக்கால் அது அவ்விதமாக இருக்க முடியாது. ஒருக்கால்..." என்ற எண்ணம் உங்களுக்கு வர ஆரம்பிக்கும். உடனடியாக அதை உங்கள் மனதிலிருந்து எடுத்துப் போடுங்கள் நேர்மறையான, ஐயத்திற்கிடமில்லாத காரியங்களைக் குறித்து சிந்தியுங்கள். எதிர்மறையான எண்ணம் ஒரு போதும் உங்களினூடாக கடந்து போக விட வேண்டாம். அந்த அது துவங்கினால், எப்படியாயினும், அது உங்களை நிறுத்திப்போடும்படிக்கு விடாதிர்கள். இயேசு என்கின்ற நேர்மறையான, ஐயத்திற்கிடமில்லாத சிந்தனைகளாக இருக்கும்படிக்கு வைத்திருங்கள். 29 குருடனான பர்திமேயு, சான் பெர்னாண்டோ, கலிபோர்னியா, 55-1115 அவர் தோன்றாததின் காரணம் அவர்கள் இந்த காரியங்களைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கையில், ஒரு புதியவர் நடந்து அங்கே வந்தார். அது வழக்கமாக...அது நீங்கள் அதை... நீங்கள் அவரைக்குறித்து சிந்திக்க ஆரம்பிக்கையில், அப்பொழுது தான் அவர் உங்களிடமாக தோன்றுவார். அவர்கள் அவரைக் குறித்து பேசிக் கொண்டிருந்த போது அப்பொழுது அவர் அங்கே தோன்றினார். ஆகவே அதன் காரணமாகத்தான், ஒருக்கால் அவர் நம்மில் அநேகருக்கு தோன்றுவதில்லை. இயேசுவைக் குறித்து பேசுவதற்கு பதிலாக நாம் மற்ற காரியங்களைக் குறித்தே அதிகமாகப் பேசுகிறோம். நாம் கார்கள் வியாபாரம் குறித்தும் மற்றவைகளைக் குறித்தும், துணி துவைத்தலைக் குறித்தும், எந்தவிதமான சலவை பவுடர் உபயோகிக்கிறோம் என்பவைகளைப் பற்றி பேசுகிறோம் வானொலி நிகழ்ச்சியை கேட்கின்றோம் அதின் அர்த்தமற்றவைகளை கேட்கின்றோம். அதன் காரணமாகத் தான் அவர் தோன்றுவது இல்லை. நாம் மாத்திரம் நம் சிந்தைகளை அவர் மீது வைப்போமானால் ...." என் இருதயத்தின் தியானமும்." அவர் யோசுவாவிடம் கூறினார், அவர் "இரவும் பகலும் இந்த காரியங்களை தியானித்துக் கொண்டிருப்பாயாக" என்று கூறினார். "நான் அவைகளை என் கட்டிலில் கட்டி வைத்திருக்கிறேன்" என்று தாவீது கூறினான். நிச்சயமாக, அவை தாமே..?... அவை உங்களுக்குள்ளே இருக்கும்படிக்குச் செய்யுங்கள், அவைகளைக் குறித்து சிந்தியுங்கள். அவைகளின் பேரில் தியானியுங்கள். அப்பொழுது தான் அவர் தோன்றுகின்றார். 22 - இயேசு உயிர்த்தெழுந்தார், சிக்காகோ, இல்லினாய் 56-012E வெற்றியுள்ள வாழ்க்கையை வாழ்வது மிகவும் எளிமையான ஒன்றாக இருக்குமல்லவா நம்முடைய சிந்தை தேவன் பேரிலும் மற்றும் தேவனைப் பற்றின காரியங்கள் பேரிலும் இன்னும் அதிகமாக சிந்திக்க எடுத்துக்கொள்ளுமானாமல், கிறிஸ்துவுக்குள்ளாக ஒரு வெற்றியுள்ள ஜீவியம் செய்வது மிகவும் எளிமையான ஒன்றாக இருக்கும். அவர் நம்மோடிருந்து... 16 - குருடனான பர்திமேயு, லிமா, ஒஹையோ, 57-0127E கிறிஸ்துவின் மீதே சிந்தனை இருக்கட்டும் கடந்து சென்ற நாட்களில் நாம் உட்கார்ந்திருந்த போல நாம் உட்கார்ந்து, நம்முடைய ஸ்தாபன சபை பற்றுதலிலிருந்து நம்முடைய தியானமானது எடுக்கப்படுமானால், நம் தியானம் நம்முடைய கிரியைகளின் பேரிலிருந்து எடுக்கப்படுமானால் அல்லது நம்முடைய மனதில் நாம் கொண்டிருக்கின்ற மூட நம்பிக்கையிலிருந்து எடுக்கப்பட்டு, அந்த தியானம் அவரின் பேரிலும் அவருடைய பிரசன்னத்தின் பேரிலும் வைக்கப்படுமானால், அந்த நாளிலே அவர் குருடனான பர்திமேயுவுக்கு என்ன செய்தாரோ அந்த அதே காரியத்தை இன்றிரவு அவர் வந்து செய்வார். நாம் மாத்திரம் அதைச் செய்வோமானால், நம்முடைய சிந்தையானது அவர் பேரிலே தரித்திருக்கும்படிக்கு நாம் வைத்திருப்போமானால். ஆகவே கவனியுங்கள். நாம் அந்த காரியங்களின் மீது சிந்தித்துக் கொண்டிருக்கையில் அப்படியாகும். வேதாமம், "புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள்" என்று கூறுகின்றது. இப்பொழுது உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். சபைக்கு வந்து கூட்டத்தில் உட்கார்ந்து, நமக்கு ஒரு ஜெப அட்டை கிடைக்கவில்லை என்பதினாலோ அல்லது அண்டை வீட்டார் ஏதோ ஒரு கெட்ட காரியத்தை செய்ததினால் நாம் மனம் தளர்ந்து அல்லது ஏதோ ஒரு சிறு காரியத்தினாலோ அல்லது ஏதோ ஒன்றினாலோ நாம் மனம் தளர்ந்து சோர்வுற்று அதை கூட்டத்தில் உட்கார்ந்துக் கொண்டு நினைத்துப்பார்த்துக் கொண்டிருப்பதினால் நமக்கு என்ன நன்மை வரப்போகிறது? அவ்விதமாக நீங்கள் செய்யும்போது அது கிறிஸ்துவை உங்களிடமாக அப்mபுறமாக வைத்து விடுகின்றது. நீங்கள் அவரைக் குறித்து சிந்திக்கும் போது தான் காரியம் நடக்கின்றது. இயேசுவின் உயிர்தெழுதலுக்கு பின்னர் சீஷர்கள் எம்மாவுக்கு போகிற பாதையிலே போய் கொண்டிருந்த போது அவரைக் குறித்து அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது, அப்பொழுது அவர் அவர்களுக்கு தோன்றினார். நாம் நம்முடைய சிந்தனைகளை உலகத்தின் காரியங்கள் அநேகத்தின் பேரில் வைத்திருக்கின்றோம். நாம் மாத்திரம் அந்த காரியங்களை நம்முடைய மனதிலிருந்து வெளியே எடுத்துப் போட்டு, அவரைக் குறித்தும் அவருடைய அதிசீக்கிர வருகையைக் குறித்தும் சிந்திப்போமானால், சபையில் இன்னும் அதிக வெளிப்பாடுகளும் வல்லமையும் இருக்கும். ஆனால் நாமோ..."நாளை நான் என்ன செய்யப்போகிறேன்? அடுத்த வாரம் நான் என்ன செய்ய வேண்டும்? என் வேலையை நான் தக்க வைத்துக் கொள்வேனா? இந்த காரியத்தை...." என்று நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். அந்த எல்லா காரியங்களும் தேவனுடைய கரங்களில் இருக்கின்றது. கிறிஸ்துவைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருங்கள். 17 - குருடனான பர்திமேயு, பீனிக்ஸ், அரிசோனா, 57 - 0301 தீமையை உங்கள் சிந்தையை விட்டு அகற்றுங்கள் நாம் சகோதரர் மற்றும் சகோதரிகளாக இருக்கின்றோம். ஓ, தேவபக்தியுடன் ஜீவியுங்கள். தேவனுடைய குமாரத்திகளைப் போல ஜீவியுங்கள். தேவனுடைய குமாரர்களாக ஜீவியுங்கள். இனிமையாக, அன்பாக, தாழ்மையாக ஜீவியுங்கள். உங்கள் சிந்தனைகளிலே ஒரு போதும் எந்த ஒரு தீமையையும் வர விடாதீர்கள்; அப்படி வருமானால் உடனடியாக அதை வெளியே விரட்டுங்கள். அது கதவைத் தட்டுமானால், அதை எடுத்துப் போடுங்கள், கூறுங்கள் -- உங்கள் அடையாளத்தை அப்படியே காட்டுங்கள். "நான் இரத்தத்தின் கீழ் இருக்கின்றேன்" என்று தொடர்ந்து அப்படியே நடந்து கொண்டே இருங்கள். 233, 234 - அடையாளம், ஜெபர்சன்வில், இண்டியானா, 63 - 0901M ஒன்றைப் பேசுதல் ஆனால் வேறொன்றை சிந்தித்தல் ஆகையால் நீங்கள் வெளிப்புறம் ஒன்றைச் சொல்லி, உட்புறத்தில் வேறு விதமாக எண்ணும் இயல்புடையவர் களாயிருந்தால், அதை உடனடியாக நிறுத்திவிடுங்கள். உங்கள் சிந்தனைகளெல்லாம் தேவனையே நோக்கி இருக்கட்டும். அவைகளைச் சுத்தமாக வைத்துக் கொண்டு அதில் நிலைத்திருங்கள். எப்பொழுதும் அதே காரியத்தைப் பேசுங்கள், பாருங்கள்? 'நல்லது, நான் விசுவாசிப்பதாய் தற்பொழுது சொல்லிவிடுகிறேன்; ஆனால் அது சரியா, தவறா என்பதை பிறகு ஆராயலாம்" என்று மாய்மாலம் கொள்ள வேண்டாம். நீங்கள் அதை விசுவாசியுங்கள். ஆமென். 119 - முதலாம் முத்திரை, ஜெபர்சன்வில், இண்டியானா, 63 -0318 மணவாட்டியே யுத்தத்தில் முன்னேறு யுத்தம் இல்லையெனில், வெற்றி இல்லை இப்பொழுது. நீங்கள் ஒரு வெற்றியை கொண்டிருக்க வேண்டுமென்றால், ஒரு யுத்தம் இருந்தாக வேண்டும். யுத்தங்கள் இல்லை என்றால் வெற்றிகள் இல்லை. ஆகவே நாம் யுத்தங்களுக்கும் சோதனைகளுக்காகவும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். அது நாம் வெற்றிகளைப் பெறும்படிக்கு தேவன் நமக்கு வாய்ப்பு தருவதாகும். ஓ, என்னே, அது இன்னும் நலமாக உணரும்படிக்குச் செய்கிறதல்லவா? பாருங்கள், யுத்தம் தொடர்ந்து வருகின்றது. யாராவது ஒருவர் உங்களைக் குறித்து கெட்டதான ஒன்றைக் கூறுகின்றனர். வியாதிகள் உங்கள் மேல் வருகின்றது. அவர் உங்களை சுகப்படுத்தி தம்முடைய உதவியை ஆதரவை காண்பித்து, அதினாலே உங்களுக்கு என்ன கூற விழைகிறார் என்பதை காண்பிக்கும் பொருட்டு, ஒருக்கால் தேவன் உங்களுக்கு அந்த சிறிதான பாடுகளை கொடுக்கலாம். 13, புறஜாதி யுகத்தின் துவக்கமும் முடிவும். ஜெபர்சன்வில், இண்டியானா, 55 0109E-